செய்திகள் :

ஊட்டி‌: 'புரோக்கோலி ரூ. 250; சுக்குனி‌ ரூ.‌ 85' - எகிறும் சைனீஸ் காய்கறிகளின் விலை; காரணம் என்ன?

post image

இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலை காய்கறி உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் ஒன்றான நீலகிரியில் சைனீஸ் ரக காய்கறிகளையும் விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

குறிப்பாக சைனீஸ் கேபேஜ், புரோக்கோலி, ஹைஸ்பெர்க், லெட்யுஸ், ஸ்பிரிங் ஆனியன், சுக்குனி, பார்சிலி, செல்லரி போன்ற சைனீஸ் ரக காய்கறிகளைப் பயிரிட அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சைனீஸ் காய்கறிகள்
சைனீஸ் காய்கறிகள்

நீலகிரி மலைக் கிராமங்களில் விளைவிக்கப்படும் சைனீஸ் ரக காய்கறிகளைச் சந்தைப்படுத்துவதற்காக ஊட்டி நகராட்சி சந்தையில் அரசு கூட்டுறவு மற்றும் தனியார் மொத்த விலை ஏல மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.

ஊட்டியிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் சைனீஸ் காய்கறிகளை அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சைனீஸ் காய்கறிகளின் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காரணம் குறித்துத் தெரிவிக்கும் சைனீஸ் காய்கறி மொத்த வணிகர்கள், "மே மாதங்களில் சைனீஸ் ரக காய்கறிகளின் தேவை தென்‌மாநிலங்களில் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிகம் இருக்கும்.

ஆனால், ஏப்ரல், மே போதிய மழைப்பொழிவு இருக்காது எனக் கருதிய விவசாயிகள் சைனீஸ் ரக காய்கறிகளின் சாகுபடி பரப்பளவைக் குறைத்துள்ளனர்.

சைனீஸ் காய்கறிகள்
சைனீஸ் காய்கறிகள்

ஆனால், எதிர்பாராத வகையில் கடந்த இரண்டு மாதங்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சைனீஸ் காய்கறிகளில் அழுகல் பாதிப்பும்‌ ஏற்பட்டு வருகிறது.

வழக்கமான தினசரி வரத்தும்‌ கணிசமாகக் குறைந்து வருகிறது. இதன் காரணமாகவே விலை அதிகரித்து வருகிறது " என்றனர்.

விலை உயர்வு குறித்துத் தெரிவித்த விவசாயிகள், "வழக்கமாக ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகும் புரோக்கோலி கடந்த ஒரு வாரமாக ரூ.250 க்கு விற்பனையாகி வருகிறது.

சைனீஸ் காய்கறிகள்

அதிகபட்சமாக ரூ.40 க்கு விற்பனையாகி வந்த மஞ்சள் சுக்குனி‌ தற்போது ரூ‌.85 க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல் சைனீஸ் கேபேஜ் ரூ.40 க்கும், ஐஸ்பர்க் ரூ.45 க்கும், ஸ்பிரிங் ஆனியன் ரூ.70 க்கும் விற்பனையாகி வருகிறது.

இதேபோல் மற்ற சைனீஸ் காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

"ஒருவரின் தவறால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது!" - விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை எழும்பூர் ராஜேந்திர ஸ்டேடியம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிணைந்து, தங்களது தர்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும்... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்கே.ஜெயமணிசெங்கமடை,ராமநாதபுரம்.97910 36746வியட்நாம் கறுப்புக் கவுனி, தங்கச் சம்பா, பாஸ்மதி விதைநெல் மற்றும் செம்மரங்கள்.ஆர்.செந்தமிழ்செல்வன்,திருவையாறு,தஞ்சாவூர்.96885 25605நல்ல நில... மேலும் பார்க்க

வங்கி பணியை உதறிவிட்டு விவசாயம்; மருந்து தெளிக்க ஹெலிகாப்டர் - ரூ.70 கோடி வருவாய் ஈட்டும் பட்டதாரி

இன்றைக்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட விவசாயம் பக்கம் எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளனர். சிலர் லட்ச ரூபாய் சம்பளம் தரும் கார்ப்ரேட் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தீஷ்கர் ம... மேலும் பார்க்க

பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் மோசடி; 6 லட்சம் போலி மனுக்களால் திட்டத்தை ரத்து செய்த மகா. அரசு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பிரதமர் பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் ப்ரிமியம் தொகை பயிர்களுக்குத் தக்கபடி 1.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.இதே காப்பீடுத் திட்டத்தை மகாராஷ்டிரா அரச... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: எகிறும் எலுமிச்சை பழம் விலை.. காரணம் என்ன?

கோடைகாலம் தொடங்கிவிட்டதால் சூட்டைத்தணிக்கும் வகையிலான இளநீர், சர்பத், தர்ப்பூசணிப்பழம், ஜூஸ் வகைகள், பழங்கள் வியாபாரம் களைகட்டியுள்ளது. இதில் சர்பத் மற்றும் ஜூஸ் போடுவதற்காக எலுமிச்சையின் தேவை அதிகரித... மேலும் பார்க்க