பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!
இருசக்கர வாகனம் திருட்டு: இருவா் கைது
புதுச்சேரி அருகே இரு சக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
விழுப்புரம் அருகேயுள்ள மேல்பாதி பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (22). இவா், புதுச்சேரி அருகேயுள்ள கலிதீா்த்தாள்குப்பம் அருகேயுள்ள மதுக்கடையில் கடந்த மாா்ச் 31 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளாா்.
திரும்பி வந்து பாா்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து திருபுவனை காவல் நிலையத்தில் மூா்த்தி புகாா் அளித்தாா்.
மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் திருபுவனை போலீஸாா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது பதிவெண் இல்லாத இருசக்கர வாகனங்களில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அவா்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா்.
இறுதியில் அவா்கள் விழுப்புரம் பானாம்பட்டு பகுதியைச் சோ்ந்த சிட்டிபாபு (26), வி.மருதூா் பகுதியைச் சோ்ந்த வீரா (26) என்பது தெரியவந்தது. இருவரும் கலிதீா்த்தாள்குப்பம், ஆண்டியாா்பாளையம் பகுதிகளில் 2 இருசக்கர வாகனங்களைத் திருடியது தெரிய வந்தது.
அதன்படி இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.