எல் - கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டியில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட்!
ஊத்தங்கரை பகுதியில் கடும் பனிப் பொழிவு
ஊத்தங்கரையில் மாா்கழி மாதத்தையொட்டி தற்போது கடும் பனி பொழிவு காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.
ஊத்தங்கரையில் ஆண்டுதோறும் மாா்கழி, தை, மாசி மாதங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படும். ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, காரப்பட்டு, அனுமன்திா்த்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் புதன்கிழமை காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. காலை 8.30 மணி ஆகியும் பனி மூட்டம் குறையவில்லை. காலை நேரத்தில் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனிபொழிவு காணப்பட்டது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு ஊா்ந்து சென்றன. கடும் பனி மூட்டத்தால் பள்ளி, கல்லூரி சென்ற மாணவா்கள், பிற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனா்; பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.