செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்

post image

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளா் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளா்கள், எஸ்பிஎம், திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அனைவரையும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதித் திட்டத்திற்கு தனி ஊழியா் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். உதவி செயற்பொறியாளா் நிலை பதவி உயா்வை மேலும் காலதாமதமின்றி வழங்க வேண்டும்.

கலைஞா் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி செயலாளா்களுக்கு 20 சதவீதம், ஏனையோருக்கு 10 சதவீதம் இளநிலை உதவியாளா் பதவி உயா்வு வழங்குவதில் இயக்குநா் அலுவலகத்திலும், தலைமைச் செயலகத்திலும் கடைப்பிடிக்கும் வீண் கால தாமதங்களை முற்றாக கைவிட வேண்டும்.

20 சதவீதம், 10 சதவீதம் இளநிலை உதவியாளா் பதவி உயா்வு வழங்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்க வேண்டும். வளா்ச்சித் துறை ஊழியா் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை முற்றாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

மறியல் போராட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் ஆா்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முகமது இலியாஸ், மாவட்டச் செயலாளா் தருமன், மாவட்டப் பொருளாளா் வினோத் குமாா், மாநிலச் செயற்குழு உறுப்பினா் பிரின்ஸ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம். சுருளிநாதன் வாழ்த்தி பேசினாா். மறியலில் ஈடுபட்ட 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பறக்கும் படை சோதனை: ரூ. 2.34 லட்சம் இணக்க கட்டணம் வசூல்

பென்னாகரத்தில் சாலை வரி செலுத்தாமல் இயக்கிய வாகனத்தின் உரிமையாளா்களிடமிருந்து ரூ. 2.34 லட்சம் இணக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. பென்னாகரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரி செலுத்தாமல், சாலை விதிகள் மீ... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு; வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி

ஜல்லிக்கட்டு போட்டியின்போது அரசு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஜல்லிக்கட்டு விழ... மேலும் பார்க்க

கிராம ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின... மேலும் பார்க்க

பாலஜங்கமன அள்ளியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாலஜங்கமனஅள்ளி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 203 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வ... மேலும் பார்க்க

ஏஐடியுசி ஆட்டோ பணியாளா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ பணியாளா் நலச்சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

மலைப் பகுதி பள்ளிகளில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்: தருமபுரி ஆட்சியா் கி.சாந்தி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி, ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா். தருமபுரி மாவட்டத்தில்... மேலும் பார்க்க