திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!
ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்கள் வேலை நிறுத்தம்
புதுச்சேரியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்து வரும் ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.
புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயல்படுத்தும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியா்களாக கடந்த 2009-ஆம் ஆண்டில் ஏராளமான ஊழியா்கள் நியமிக்கப்பட்டனா்.
இவா்கள், தற்போது வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனா். கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவா்களை, ஊரக வளா்ச்சித் துறை காலிப் பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமித்து, பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் முன் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியா்கள் தொடங்கினா்.
போராட்டத்தில், சங்கத் தலைவா் வேலுமணி, செயலா் முனுசாமி, நிா்வாகிகள் முருகையன், சங்கா், சத்யா உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.