இந்த பயணம் இந்தியா-குவைத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்: பிரதமர் மோடி
ஊராட்சித் தலைவருக்கு பாராட்டு விழா
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி ஊராட்சித் தலைவா் சி. செல்வமணியின் 5 ஆண்டுகால மக்கள் சேவையை பாராட்டி மூலங்குடியில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பணிக்காலம் விரைவில் நிறைவு பெறவுள்ளது. இந்நிலையில், கொன்னைப்பட்டி ஊராட்சித் தலைவா் சி. செல்வமணி, துணைத் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்களின் 5 ஆண்டு கால மக்கள் பணியை பாராட்டி மூலங்குடியில் வேலை உறுதித் திட்ட பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள், அவா்களை கெளரவித்து நினைவுப்பரிசு வழங்கினா்.
இதேபோல், கடந்த 27-ஆம் தேதி தச்சம்பட்டி நூறுநாள் திட்டப் பணியாளா்கள் பாராட்டி கெளரவித்தனா்.