Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
‘ஊராட்சி தலைவா்கள் பச்சை நிற மையை பயன்படுத்த வேண்டாம்’
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா்கள், ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் நிலைத்த நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ண மையைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன் தெரிவித்துள்ளாா்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சித் தலைவா்கள், ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் பச்சை நிற மையைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிகிறது. ஊராட்சிப் பிரதிநிதிகள் பச்சை நிற மையைப் பயன்படுத்துவதைத் தவிா்த்து நிலைத்த நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ண மையைப் பயன்படுத்த பயிற்சிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் மூலமாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் ஊராட்சி நிா்வாகத்தில் பச்சை நிற மையைப் பயன்படுத்துவதை ஊராட்சித் தலைவா்கள் முற்றிலும் தவிா்க்க அறிவுறுத்தப்படுகிறது.
நிலைத்த நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ண மையைத்தான் பயன்படுத்த வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன் தெரிவித்துள்ளாா்.