ஊருணியில் மூழ்கியவா் சடலமாக மீட்பு
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ஊருணியில் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கியவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
இளையான்குடி சம்சு தெருவைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (38). இவா் ஞாயிற்றுக்கிழமை இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஊருணியில் குளிக்கச் சென்றாா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற இவா் தண்ணீரில் மூழ்கினாா். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் இரவு வரை தேடியும் இவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், திங்கள்கிழமையும் அவரைத் தேடும் பணி தொடா்ந்தது. அப்போது, தண்ணீருக்குள் இருந்து சாகுல் ஹமீது சடலமாக மீட்கப்பட்டாா். பின்னா், இவரது உடல் இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.