செய்திகள் :

எஃப்ஐஆரை காவல்துறை வெளியிடவில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

post image

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் திங்கள்கிழமை இரவு கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த அடையாளம் தெரியாத நபர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார்.

இதுதொடர்பாக ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க | பிஎம்டபிள்யூ காரை விரும்பாத மன்மோகன் சிங்! - பாஜக அமைச்சர் பகிர்ந்த தகவல்!

மேலும் மாணவியின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை இணையத்தில் பதிவேற்றப்பட்டு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்தது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

உயர்நீதிமன்றம் இதனை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் முறையிட்ட நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு இந்த விவகாரத்தில் உள்துறைச் செயலர், டிஜிபி உள்ளிட்டோர் பதிலளிக்கக் கோரியது.

இதையும் படிக்க | மாணவி பாலியல் வழக்கில் ஏன் முரண்பாடுகள்? உண்மையில் என்ன நடந்தது? - அண்ணாமலை கேள்வி

அதன்படி, முதல் தகவல் அறிக்கையை(எஃப்ஐஆர்) காவல்துறை வெளியிடவில்லை என்றும் இணையதளத்தில் வெளியான முதல் தகவல் அறிக்கை உடனடியாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வழக்கு தொடர்பான விரிவான அறிக்கை சீல் வைத்த உறையில் தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள், தலைமை நீதிபதியின் உத்தரவு பெற்றபிறகு வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று கூறியதுடன், ரிட் வழக்காக தாக்கல் செய்தால் உடனடியாக விசாரிக்கப்படும் என்று கூறினர்.

வைகை ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

தைப்பூசத்தை முன்னிட்டு, வைகை விரைவு ரயில் பிப்.11 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு இருமுடி கட்டி செல்லும் பக்தா்களின் வசதிக்காக மேல்மருவத்... மேலும் பார்க்க

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர ஹோட்டல்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நடசத்திர ஹோட்டல்களுக்கு காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 2025-ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள நட்சத... மேலும் பார்க்க

முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்: சட்டத் துறை அமைச்சா் ரகுபதி

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடா்பான முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் ‘... மேலும் பார்க்க

சென்னையில் டிச.31 - ஜன.1 வரை கடலில் குளிக்கத் தடை

புத்தாண்டையொட்டி டிச.31 மாலை முதல் ஜன.1 வரை கடலில் குளிக்கவோ, இறங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், தலைமையில் 2025-ம்ஆண்டு புத்தாண்டு நாளையொட்டி பொதுமக்கள் அமைதியாகவும்... மேலும் பார்க்க

தமிழகம் 2024

ஜனவரி8: தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் 2 நாள் நடைபெற்றது. இம்மாநாட்டில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவு... மேலும் பார்க்க

மாணவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை அண... மேலும் பார்க்க