மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
எஃப்பிஐ இயக்குநரான காஷ் படேல்... ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்து!
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட் அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காஷ் படேலின் நியமனத்துக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 49 வாக்குகள் பதிவானது. இதனைத் தொடர்ந்து, எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலின் நியமனத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவரது நியமனத்திற்கு உலகம் முழுவதும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உதவியாளர் டான் ஸ்கேவினோ தெரிவித்துள்ள வாழ்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Congratulations to the new Director of the FBI, @Kash_Patel! pic.twitter.com/JsANV0s9cP
— Dan Scavino (@Scavino47) February 20, 2025
பாஜிராவ் மஸ்தானி படத்தில் ‘மல்ஹரி’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. அந்தப் பாடலில் ஆடும் ரன்வீர் சிங் முகத்தில் காஷ் படேலின் முகத்தை எடிட் செய்த விடியோவை டிரம்ப் உதவியாளர் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், எஃப்பிஐ-யின் புதிய இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காஷ் படேலுக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.
டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது இதே விடியோவில் அவரது முகம் எடிட் செய்து பகிரப்பட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.