செய்திகள் :

"எங்களை சிறையில் தள்ளினாலும் ஊதிய முரண்பாடு குறையும் வரை போராடுவோம்"

post image

சென்னை: எங்கள் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் எங்களை சிறையில் தள்ளினாலும் எங்களுடைய ஊதிய முரண்பாடு குறையும் வரை நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம். எங்களுடைய உயிரே போனாலும் போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்தார்.

சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகில் இடைநிலை பதவிமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சம வேலை சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றக்கோரி 20 ஆயிரம் இடைக்கால ஆசிரியர்களை நடப்பு பேரவைக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் நிறைவேற்ற வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, செய்தியாளர்களுடன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:

2009 இல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே பதவி, ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி என அனைத்தும் இருந்த போதும், கடந்த திமுக ஆட்சி காலத்தில் இரு வேறு அடிப்படை ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது ரூ.3,170 ஆக குறைவு ஏற்பட்ட ஊதிய முரண்பாடு தற்போது ரூ.27 ஆயிரம் வரை ஊதிய முரண்பாட்டை ஒவ்வொரு மாதமும் சந்தித்து வருகிறோம்.

கடந்த ஆட்சியில் தற்போதைய முதல்வர் உங்களுடைய ஊதிய முரண்பாடு களையப்படும் என்று போராட்ட களத்திற்கே வந்து வாக்குறுதி அளித்தார். அது திமுக தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு ஆகியும் இதுவரை ஊதிய முரண்பாடு களையப்படவில்லை.

எட்டு நாள் உண்ணாவிரதம், 19 நாள் முற்றுகை போராட்டம் என அத்தனை வழியிலும் அரசுக்கு எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தையின் போதும் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆனால் இன்னும் அதற்கு ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

பேரிடர் நிவாரண நிதி! தமிழ்நாட்டுக்கு ரூ. 522.34 கோடி ஒதுக்கீடு

ஒரு நாளைக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.620 அடிப்படை உதயமாக உள்ளது. 10, 12 ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும், தகுதித்தேர்வு நியமனத் தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் எடுத்தால் தான் இடைநிலை ஆசிரியர் பணி கிடைக்கிறது.

எங்களுடைய கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். அப்படி நிறைவேற்றினால் நன்றி அறிவிப்பு மாநாடு ஒன்றை நடத்துவோம்.

அப்படி நிறைவேறவில்லை என்றால் எங்களை சிறையில் தள்ளினாலும் எங்களுடைய ஊதிய முரண்பாடு குறையும் வரை நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம்.

2009 இல் இருந்த பல பேர் ஓய்வு பெற்று விட்டனர். இனிமேல் இருப்பவர்களுக்காவது ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.

11 ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். எங்களுடைய வாழ்வாதாரம் இது ஒன்று மட்டும் தான். அரசு இன்னும் தாமதப்படுத்தினால் கடைசி கட்டமாக சிறையை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்களுடைய உயிரே போனாலும் இந்த போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று கூறினார்.

மக்களின் நம்பிக்கை சின்னமாக தாமரை உள்ளது: அமித் ஷா

புதுதில்லி: பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாளில் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டு மக்களின் இதங்களில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் சக்திவாய்ந்த சின்னமாக ... மேலும் பார்க்க

தமிழக தலைவர்கள் பலர் தமிழில் கையெழுத்திடுவதில்லை: பிரதமர் மோடி

ராமேசுவரம்: தமிழ்நாடு தலைவர்கள் பலர் எனக்கு கடிதம் அனுப்புகின்றனர், ஆனால் அதில் தமிழில் கையெழுத்திடுவதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுத... மேலும் பார்க்க

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!

உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.இதைத் தொடா்ந்து, ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது.நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன... மேலும் பார்க்க

யேமன் மீது அமெரிக்கா தாக்குதல்! அதிபர் டிரம்ப் பகிர்ந்த விடியோ!

யேமனின் ஹவுதி படையின் மீதான அமெரிக்காவின் டிரோன் தாக்குதல் விடியோவை அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.யேமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சிப்படையின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க

ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது அரிது: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது மிகவும் அரிது என இந்திய அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக அபாரமாக ... மேலும் பார்க்க