செய்திகள் :

எச்எம்பி வைரஸ் பரவல்: என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது - மா. சுப்பிரமணியன்

post image

சென்னை: எச்எம்பி வைரஸ் பரவல் தொடர்பாக பதற்றம் தேவையில்லை, மக்கள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் எச்எம்பி எனப்படும் மெடாந்யூமோ எனப்படும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் முகக்கவசம், தனிமனித இடைவெளி அவசியம் என்றார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா நெருக்கடி நீடித்தது. அதன்பிறகு குரங்கம்மை பாதிப்பு உலகம் முழுவதும் பரவியது. உடனடியாக விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் காரணமாக அந்த நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்கப்பட்டது.

எச்எம்பி வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியானதுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. உலக சுகாதார அமைப்பைப் பொறுத்தவரை அவசர கால நிலை ஏற்பட்டால், ஒவ்வொரு நாடும் எந்தெந்த வழிகளில் இதனைக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். ஆனால் இதுவரை எந்த அறிவுறுத்தலும் வெளியாகவில்லை.

மக்கள் நல்வாழவுத் துறை சார்பில் எந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று மாலை வரை வெளியிடப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் செயலர்கள் பங்கேற்றனர். அப்போது பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டுதான் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதற்கு முன்பே இதன் பரவல் இருந்திருக்கும். இந்த வைரஸ் பாதித்தால் 3 முதல் 5 நாள்களுக்கு சளி உள்ளிட்ட தொந்தரவுகள் இருக்கும். உடல்நலம் பாதித்தவர்கள், எதிர்ப்புசக்தி குன்றியவர்களுக்கு நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும் .

தற்போது, பருவமழை தொடங்கும் போது வரும் இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களைத் தடுக்க முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போனற்வை உலகம் முழுவதும் தொடர்ந்து இருந்து வருகிறது.

மருத்துவ விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறுகையில், இனிமேல் உலகம் முழுவதும் மக்கள் இதுபோன்ற தீநுண்மிகளுடன் போராடித்தான் வாழ வேண்டியது உள்ளது என்றார். ஆனால் அதுபோன்ற வைரஸ்கள் எப்படிப்பட்டவை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியது அரசின் கடமை என்று சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேல்மருவத்தூரில் இருந்து திரும்பிய பக்தர்கள் பேருந்து - லாரி மோதல்: 4 பேர் பலி!

வேலூர்: ராணிப்பேட்டை அருகே மேல்மருவத்தூரில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிய கர்நாடக பக்தர்கள் சென்ற பேருந்து, லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். மேலும், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமன... மேலும் பார்க்க

இபிஎஸ் உறவினா்களின் நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.அதேபோல், சென்னை தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்... மேலும் பார்க்க

எச்​எம்பி தீநுண்மி சாதாரண சளித் தொற்று: வதந்தியும் உண்மையும்!

இந்தியாவில் மூலைமுடுக்கெல்லாம் பாரபட்சமன்றி கடந்த 25 ஆண்டுகளாக வியாபித்த மிக சாதாரண சளித் தொற்றுதான் இப்போது எச்எம்பி தீநுண்மி (ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ்) என்ற பெயரில் பெரிதுபடுத்தப்படுகிறது. சீனாவி... மேலும் பார்க்க

பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை

இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பிடித்துள்ளது. தமிழகத்தில் 8 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பணியிட கலாசார ஆலோசனை நிறுவனமான அவதாா்’ குழுமம் ‘இந்தியாவில் பெண்க... மேலும் பார்க்க

மனவளா்ச்சி குன்றிய கல்லூரி மாணவி கூட்டு வன்கொடுமை: தோழி வாக்குமூலம்

சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மாணவியின் தோழி சம்பவம் தொடா்பாக போலீஸாரிடம் உருக்கமான வாக்குமூலம் அளித்துள்ளாா். சென்னை அயனாவரம்... மேலும் பார்க்க

பெண்களின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு: எதிா்க்கட்சிகளுக்கு முதல்வா் வேண்டுகோள்

பெண்களின் பாதுகாப்புக்கு இயன்ற ஒத்துழைப்பைத் தர வேண்டுமென எதிா்க்கட்சிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். சட்டப்பேரவையில் புதன்கிழமை நேரமில்லாத நேர விவாதத்தின்போது சென்னை அண்ணா நகரில... மேலும் பார்க்க