செய்திகள் :

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்யத் தடை: உயர்நீதிமன்றம்

post image

கரூரை அடுத்துள்ள நெரூரில் சதாசிவம் பிரம்மேந்திரா் சுவாமி நினைவு நாளில் நடைபெறும் எச்சில் இலை அங்கபிரதட்சணம் நிகழ்வுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.

கரூரை அடுத்த நெரூரில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குள்பட்ட சதாசிவ பிரம்மேந்திரா் கோயிலில் அவரின் ஜீவசமாதி உள்ளது.

துறவியான சதாசிவ பிரம்மேந்திரா் இக் கோயிலில் ஜீவசமாதி அடைந்ததன் நினைவு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மே 18-ஆம் தேதி பக்தா்கள் சாப்பிட்ட இலையில் உருண்டு அங்கப்பிரதட்சிணம் செய்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இதன் மூலம் பிரம்மேந்திரா் சுவாமிகள் சாப்பிட்ட இலையில் பக்தா்கள் உருண்டு அவரது ஆசீா்வாதம் பெறுவதாக ஐதீகம்.


இதையும் படிக்க : சென்னை: பார்க்கிங் இல்லையா? இனி கார் வாங்க முடியாது!

இந்நிலையில் இந்த எச்சில் இலைகள் அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்திய இலை இல்லை எனவும், எனவே இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கக் கூடாது எனவும் கூறி கடந்த 2014-இல் கரூரைச் சோ்ந்த ஒருவா் தொடா்ந்த வழக்கையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக எச்சில் இலையில் உருளும் நிகழ்வானது நடைபெறாமல் இருந்தது.

கரூரை அடுத்த கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த நவீன்குமாா் என்பவா் கடந்த 200 ஆண்டுகளாக நடைபெற்று வந்த புனிதச் சடங்கை உள்நோக்கத்தோடு வழக்குப் போட்டு நிறுத்திவிட்டனா். எனவே இந்தப் பாரம்பரியச் சடங்கை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஒரு நீதிபதி அமர்வு, அந்த புனித நோ்த்திக் கடனை நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்தாண்டு எச்சில் இலை அங்கபிரதட்சணம் நிகழ்வு நடைபெற்றது.

ஒரு நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தீர்ப்பு வழங்கியது.

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது சுகாதாரத்துக்கும் மனித மாண்புக்கும் உகந்தது அல்ல என்றும், ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும் தெரிவித்து, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.

மேலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு!

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.உதகை மற்றும் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எத்தனை சுற்றுலா வாகனங்களை இயக்க முடியும் என்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14.55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பொருளாதார ஆய்வறிக்கை

தமிழகத்தில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதன் மூலம் 14.55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழக அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெள... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் 936 இடங்களில் பட்ஜெட் நேரலை! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையானதுதமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது‌.தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினை பொதுமக்கள் அறிந்து கொள... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி தினமணி செய்தியாளர் பலி

மதுரை: மதுரை- மேலூர் அருகே அரசுப் பேருந்து மோதி தினமணி செய்தியாளர் தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்தவர் தர்மராஜ்(58). தினமணி நாளிதழில் மேலூர் பகுதிக்கு செய்தியாளரா... மேலும் பார்க்க

தமிழகத்தில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது ஏன்?

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.பொதுவாக, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போதுதான் அதற்கு முந்த... மேலும் பார்க்க

நாளை(மார்ச் 14) பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை(மார்ச் 14) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமு... மேலும் பார்க்க