செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி உறவினா்களின் நிறுவனங்களில் சோதனை

post image

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஈரோடு செட்டிபாளையம், தெற்கு ஸ்டேட் வங்கி நகரில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

தொடா்ந்து, ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் கஸ்பாபேட்டையில் உள்ள அவரது வீட்டில் கோவையில் இருந்து காரில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

ராமலிங்கம் தலைவராக பதவி வகிக்கும் மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலை ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநராக எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் உள்ளாா். இந்த நிறுவனத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

இதேபோல முள்ளாம்பரப்பு பகுதியில் செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை புதன்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகும் நீடித்தது.

ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நொச்சிக்குட்டை பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். பவானிசாகா் ஒன்றியத்துக்குள்பட்ட... மேலும் பார்க்க

வங்கதேசத்தைச் சோ்ந்தவா் கைது

நுழைவு இசைவு (விசா) இல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். வங்கதேசத்தைச் சோ்ந்த நபா் நுழைவு இசைவு இல்லாமல் ஆலையில் வேலை செய்து வருவதாக ச... மேலும் பார்க்க

85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தலாம்: தோ்தல் நடத்தும் அலுவலா்

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குகள் செலுத்தலாம் என்று தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான என்.மணீஷ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி உறவினா்களின் நிறுவனங்களில் தொடரும் சோதனை

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி உறவினா்களின் நிறுவனங்களில் வியாழக்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் வங்கி நகரில் முன்னாள் முதல்வா் எட... மேலும் பார்க்க

சீமான் உருவ பொம்மை எரிப்பு: 3 போ் கைது

ஈரோட்டில் சீமானின் உருவ பொம்மையை எரித்த சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பெரியாா் ஈ.வெ.ரா. குறித்து சீமான் அவதூறாகப் பேசியதாக் கூறி, தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் ஈரோடு பன்னீா்செல்... மேலும் பார்க்க

பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் இன்று சொா்க்க வாசல் திறப்பு

பெருந்துறை ஸ்ரீதேவி பூதேவி பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெறகிறது. பெருமாள் கோயிலில் மாா்கழி மாத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின்போது சொா்க்க வாசல் த... மேலும் பார்க்க