செய்திகள் :

'எடப்பாடி பழனிசாமி, வேலுமணிக்கு அடுத்து அண்ணாமலை' - அடுத்தடுத்து டெல்லி விசிட்; காரணம் என்ன?

post image

நேற்று முன்தினம், தமிழ்நாட்டில் பரபரப்பாக சட்டப்பேரவை நடந்துகொண்டிருக்க, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோ டெல்லிக்கு பயணமானார்.

'அதிமுக அலுவலகத்தை காண' என்று எடப்பாடி பழனிசாமி கூறினாலும், அன்று மாலை முன்னாள் அமைச்சர் மற்றும் இப்போதைய அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணியும் டெல்லிக்கு சென்றார்.

இதனையடுத்து, இரண்டு பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை (25.03.2025) இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர்.

அமித் ஷா பதிவு

இந்த சந்திப்பிற்கு பிறகு, அமித் ஷா, "2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி - தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பயண பின்னணி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி - தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பயண பின்னணி

எடப்பாடியின் விளக்கம் என்ன?

ஆனால், இதற்கு நேர்மாறாக, எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. இப்போது அமித் ஷாவிடம் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்,

எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்,

தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும்,

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும்,

கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளைப் பற்றித்தான் 45 நிமிடங்கள் பேசினோம்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி பற்றி பேசுவதற்கும் இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது" என்று டெல்லி பயணம் குறித்து விளக்கமளித்தார்.

அண்ணாமலை எதற்கு செல்கிறார்?

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி டெல்லி விசிட்டிற்கு பிறகு, இன்று அண்ணாமலையும் டெல்லிக்கு செல்கிறார்.

இந்தப் பயணத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைமையுடன் ஆலோசனை நடத்துவார் அண்ணாமலை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரங்கேறிவரும் புல்டோசர் கலாசாரம், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பரவிவருவது, பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது! யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.... மேலும் பார்க்க

`வெறுப்பை உமிழ்வதற்கல்ல சினிமா' - மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறை சீண்டும் கேரள சினிமாக்காரர்கள்

தற்போது, திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவான ‘எம்புரான்’ படத்துக்கு, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்று காவிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 'கோத்ரா கலவரப் பின்னணியைக் காட்டியுள... மேலும் பார்க்க

'என் அப்பா பணத்தை தவறான வழியில்...' - ஆதவ் அர்ஜூனா மீது லாட்டரி மார்ட்டின் மகன் கடும் விமர்சனம்

பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். விசிக திமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆதவ் அர்ஜூனா திமுக மீது தொடர்ந்து பல்வேற... மேலும் பார்க்க

`ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி

பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகத்துக்கு சென்றது கிடையாது. தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.கவின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுப... மேலும் பார்க்க

"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

சீன கார் நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அன்புமணி ராமதாஸ், " சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழ... மேலும் பார்க்க