ஷீஷ் மஹால் விவகாரம்: முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மியினர் தடுத்து...
எட்டயபுரத்தில் தொழிலாளி தற்கொலை!
எட்டயபுரத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
எட்டயபுரம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த பால்ராஜ் மகன் பாக்கியராஜ் (42). தொழிலாளியான இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.
பாக்கியராஜ் நாள்தோறும் மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்வாராம். சனிக்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, மதுப் பழக்கத்தை நிறுத்துமாறு பாக்கியராஜை மனைவி கண்டித்தாராம்.
இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டின் ஓா் அறையில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். தகவலின்பேரில், எட்டயபுரம் போலீஸாா் சென்று, பாக்கியராஜின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.