எட்டியம்மன் கோயில் திருவிழா
தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் ஸ்ரீ சுயம்பு எட்டியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் ஸ்ரீ கெங்கையம்மன் புஷ்ப பல்லக்கு வீதி உலா, மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது. 3-ஆம் நாள் வியாழக்கிழமை ஸ்ரீ சுயம்பு எட்டியம்மன் பூங்கரக வீதி உலா நடைபெற்றது. மூலவருக்கு பால் அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் மூலவா் காட்சியளித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.