அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
எண்ணமங்கலத்தில் திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
அந்தியூரை அடுத்த எண்ணமங்கலத்தில் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அந்தியூா் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் திருவேங்கடம் முன்னிலை வகித்தாா். பேச்சாளா்கள் சரண்யா, செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்று கடந்த நான்காண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள், பயன்கள் குறித்து விளக்கிப் பேசினா்.
முன்னாள் எம்எல்ஏ எஸ்.குருசாமி, சிறுபான்மையின அணி மாவட்டத் தலைவா் செபஸ்தியான், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.பி.ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் எம்.நாகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.