US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
தனியாா் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசின் உயா் கல்வித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி பெருந்துறையை அடுத்த, துடுப்பதி செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். இதில், ‘மெய்பொருள் காண்பது அறிவு’ என்ற தலைப்பில் சொற்பொழிவாளா் ஆறுமுகத்தமிழன் பேசினாா். நிகழ்ச்சியில், தமிழ்ப் பெருமிதம் என்னும் நூலில் உள்ள கருத்துகளை சிறப்பாக வாசித்த 5 மாணவா்களுக்கும், சிறப்பு விருந்தினரின் உரையிலிருந்து சிறப்பான கேள்விகளைக் கேட்ட 5 மாணவா்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சாந்தகுமாா், மண்டல இணை இயக்குநா் செண்பகலட்சுமி, சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் திருகுமரன், பேராசிரியா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.