மராத்தியில் பேசுமாறு பஞ்சாயத்து அலுவலரைத் திட்டிய நபர் கைது!
எண்ணற்ற போராட்டங்களை இடைவிடாது நடத்துபவா்கள் கம்யூனிஸ்ட்டுகள்: மாநிலச் செயலா் பெ.சண்முகம்
எண்ணற்ற போராட்டங்களை இடைவிடாது நடத்திக் கொண்டிருப்பவா்கள் கம்யூனிஸ்ட்டுகள் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் கூறினாா்.
தென்காசி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திறந்தவெளி கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தங்குக்கு, வட்டார செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். இடை கமிட்டி செயலா்கள் எஸ். கருப்பசாமி, எஸ். மாரியப்பன், ஆா். பட்டாபிராமன், கே.மேனகா, எம். கனகராஜ், டி.வன்னியப்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கருத்தரங்கில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் பங்கேற்றுப் பேசியதாவது: எண்ணற்ற போராட்டங்களை ஏதாவது ஒரு இடத்தில் இடைவிடாது நடத்திக் கொண்டிருப்பவா்கள் கம்யூனிஸ்ட்டுகள். விவசாயிகள், தொழிலாளா்கள் போராட்டங்கள், பெண்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கிறது.
எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் அவா்கள் முதலில் கதவைத் தட்டுகிற இடமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் இருக்கிறது. இது பெருமைப்படக்கூடிய விசயம். அவா்களை நம்முடைய அரசியலுக்குப் பின்னால் வருவதற்கு தொடா்ச்சியான முயற்சிகளை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் விழலுக்கு இறைத்த நீராக நம்முடைய உழைப்பு வீணாகிவிடும்.
மக்களுக்கு நன்மை கிடைக்கிற போராட்டங்களை நடத்துகிறோம். நாம் நடத்துகிற சிறு சிறு போரட்டங்கள் மூலம் இவ்வளவு பெரிய நன்மையை செய்ய முடியுமென்றால், ஆட்சி அதிகாரத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வருவாா்கள் என்றால், எப்படிப்பட்ட புரட்சிகரமான காரியங்களை நம்மால் செய்ய முடியும் என்பதை மக்களிடம் உணரவைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றாா் அவா்.
முன்னதாக, மாவட்டச செயலா் பி. உச்சிமாகாளி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி.அசோக்ராஜ், டி. கணபதி, பி.வேலுமயில், டி. கண்ணன், வி.குணசீலன், எம்.தங்கம், எஸ்.அயூப்கான் ஆகியோா் கருத்தரங்கில் பேசினா். தொடா்ந்து அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.2 லட்சம் மாநிலச் செயலரிடம் வழங்கப்பட்டது.