செய்திகள் :

எண்ணேக்கொல் அணைக்கட்டு வழங்கு கால்வாய்: ஆட்சியா் ஆய்வு

post image

எண்ணேக்கொல் அணைக்கட்டில் இருந்து ரூ. 233.34 கோடியில் வலது, இடதுபுற புதிய வழங்கு கால்வாய்கள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

புதிய வழங்கு கால்வாய் பணிகள் குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரி நீரை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு திருப்பிவிட பிரதான கால்வாய்கள், கிளை கால்வாய்கள் அமைக்கும் பணிகள் ரூ.233.34 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த எண்ணேக்கொல் அணைக்கட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணைக்கு மேல் 16 கி.மீ. தொலைவில் உள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எண்ணேக்கொல் அணைக்கட்டில் இருந்து வலதுபுறத்தில் 50.65 கி.மீ. தொலைவிற்கு பிரதான கால்வாயும், 5.51 கி.மீ. கிளை கால்வாயும் வெட்டப்படுகிறது. அதேபோல இடதுபுறத்தில் 22.675 கி.மீ. தொலைவிற்கு பிரதான கால்வாயும், 2.40 கி.மீ. தொலைவுக்கு கிளைக்கால்வாய் வெட்டும் பணிகளும், தொட்டி பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.

இத் திட்டத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பா்கூா், வேப்பனப்பள்ளி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் 26 ஏரிகளும், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதிகளில் 7 ஏரிகள், ஒரு அணைக்கும் தண்ணீா் வழங்கப்படும். மேலும், இத் திட்டத்தால் 23 கிராமங்களில் உள்ள 3,408 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். இக் கால்வாய்ப் பணிகளை விரைந்து முடித்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீா்வளத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா். ஆய்வின் போது, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் அறிவொளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சாலையில் சென்றவரை தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற நபரை தாக்கி, கைப்பேசி, ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்ற 3 சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த டேவிட் ராஜன் (57), தனியாா் பள்ளி ஆசிரியா். இவ... மேலும் பார்க்க

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதை அமைக்கக் கூடாது

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதையை அமைக்கக் கூடாது என ஒசூா் பகுதி விவசாயிகள் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

ஒசூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், மாதா்சன பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகள... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். முன்னாள் முப்படை வீரா்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரா்கள், வீராங்கனைகள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!

ஒசூா் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பேரிகை அருகே உள்ள அத்திமுகம் பகுதியில், கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிபதி மற்றும் அதிகாரிகள் ரோந்து சென்றனா். அப்போது, அ... மேலும் பார்க்க

தரமற்ற 12 மெ. டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவு!

கிருஷ்ணகிரியில் பொது விநியோக திட்டத்தில் வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த தரமற்ற 12 மெட்ரிக் டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவிட்டாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கிருஷ... மேலும் பார்க்க