TRUMP TARIFF பாதிப்பு யாருக்கு | TACO TRADE என்றால் என்ன | IPS Finance - 275 | N...
எதற்கும் துணிந்தவன் வசூலை வேறு எந்த சூர்யா படங்களும் தாண்டவில்லை: பாண்டிராஜ்
இயக்குநர் பாண்டிராஜின் கருத்து சூர்யா ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான தலைவன் தலைவி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாகியுள்ளது.
இப்படத்திற்கு முன், நடிகர் சூர்யாவை வைத்து ‘எதற்கும் துணிந்தவன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வசூல் வெற்றியையும் அடையவில்லை.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய பாண்டிராஜ், “எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சரியாகப் போகாததற்கு நான்தான் காரணம். கடைக்குட்டி சிங்கம் படத்தைவிட பெரிய வெற்றியாகக் கொடுக்க வேண்டும் என்றுதான் வேலை செய்தோம். ஆனால், சரியாக அமையவில்லை. நடிகர் சூர்யாவுக்கும் தயாரிப்பாளருக்கும் படம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் எதிர்பார்த்த வசூலை அப்படம் பெறவில்லை. இப்படத்திற்குப் பின் வெளியான சூர்யாவின் எந்தப் படங்களும் எதற்கும் துணிந்தவன் வசூலைத் தாண்டவில்லை என்பதும் உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.
பாண்டிராஜின் இக்கருத்து சூர்யா ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ரெட்ரோ திரைப்படம் ரூ. 230 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
எதற்கும் துணிந்தவன் ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 3 பிஎச்கே ஓடிடி தேதி!