’எதிரிகளால் பேரிழப்பு’: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்!
உலக வங்கியிடம் பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை ரஷிய தயாரிப்பான ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு சர்வ சாதாரணமாக இந்தியா முறியடித்தது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில், உலக வங்கியிடம் கூடுதல் கடன் விடுக்கக் கோரி பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவு உலக வங்கியை டேக் செய்து வெளியிட்ட பதிவில்,
“எதிரிகளால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால், சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடனை பாகிஸ்தான் கோருகிறது. அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், சர்வதேச கூட்டாளிகள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
