செய்திகள் :

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்? தவெக தலைவர் விஜய்

post image

சென்னை: நீட் தேர்வை ரத்து ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று சொன்னார்களே என்று கூறியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் நடிகருமான விஜய், எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

நீட் தேர்வை மாநில அரசால் ரத்து செய்ய முடியாது, மத்திய அரசுதான் ரத்து செய்ய வேண்டும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் ரத்து செய்யப்பட்டிருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று பேரவையில் கூறியிருந்தார்.

முதல்வரின் இந்தப் பேச்சு குறித்து தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்

இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன.

தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை. என்று பதிவிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு - இபிஎஸ்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

மக்களை திமுக ஏமாற்றுவது விஜய்க்கு இப்போதுதான் தெரிகிறதா?- ஓ.பன்னீர்செல்வம்

மக்களை திமுக ஏமாற்றுவது விஜய்க்கு இப்போதுதான் தெரிகிறதா? என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்... மேலும் பார்க்க

கிண்டி சிறுவர் பூங்காவில் புதிய வசதி!

கிண்டி சிறுவர் பூங்காவில், வாட்ஸ் அஃப் வழியே நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8667609954 என்ற எண்ணிற்கு HI என அனுப்பி விவரங்களை பதிவிட்டு, டிக்கெட் பெறலாம். பொங்கல் பண்டிகையையொட... மேலும் பார்க்க

காணும் பொங்கல்: சென்னையில் 16,000 போலீஸார் பாதுகாப்பு

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சென்னை பெருநகர காவல் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையகம் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 5 வயது குழந்தைக்கு எச்எம்பிவி பாதிப்பு

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 வயது குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும், அந்த குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும் புதுச்சேரி சு... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் வி.சி.சந்திரகுமார்

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வாழ்த்து பெற்றார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிக... மேலும் பார்க்க