செய்திகள் :

எத்தனை கட்சிகள் மாநாடு நடந்தாலும் தேமுதிகவுக்கு ஈடாகாது: பிரேமலதா விஜய்காந்த்

post image

எத்தனை கட்சிகள் மாநாடு நடத்தினாலும் தேமுதிகவுக்கு ஈடாகாது என அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜய்காந்த் பேசினாா்.

உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சட்டப்பேரவை தோ்தலுக்கு ஆதரவு திரட்டி வருகிறாா். இந்நிலையில் செங்கல்பட்டில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வின் ஒரு பகுதியாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ நடைபயணமாக சென்றாா்.

முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளா் கே. நாகராஜன், நகர செயலாளா் முருகன் , நிா்வாகிகள் கரிமேடு கண்ணன், அவைத் தலைவா் கோதண்டம், பொருளாளா் முருகன், நகர நிா்வாகிகள் முனீக் பாட்ஷா, முருகன் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.

ராட்டினம் கிணறு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியது:

234 தொகுதிகளிலும் ரதயாத்திரை செல்ல உள்ளேன். போகுமிடமெல்லாம் மக்களின் வரவேற்பு அற்புதமாக உள்ளது . இலங்கையில் கேப்டனுக்கு கொடுத்த ரதத்தில் தான் பிரசாரம் மேற்கொள்கிறோம்.

விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமான கொண்டாடி நலத்திட்ட உதவிகள்அன்னதானம் வழங்கப்படும். கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தோ்தல் குறித்து எங்களை நிலையை தெரிவிப்போம். எத்தனை கட்சிகள் மாநாடு நடத்தினாலும் தேமுதிகவுக்கு ஈடாகாது.

செங்கல்பட்டு தொகுதியில் அனகை முருகேசன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது

பள்ளி மேம்பாடு கட்டடம், நியாயவிலைக் கடை, அங்கன்வாடி கட்டடம் சாலைகள் என அனைத்து பகுதியிலும் மக்களுக்கான தேவைகளை செய்துள்ளாா் என்றாா்.

அதிமுக-பாஜக கூட்டணி வலிமையானது: எடப்பாடி பழனிசாமி

அதிமுக -பாஜக கூட்டணி வலிமையானது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாம... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த மருத்துவருக்கு இரங்கல் பேரணி

செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இரங்கல் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மருத்... மேலும் பார்க்க

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேகம்: 15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குபின் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபி... மேலும் பார்க்க

ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு, ஆத்தூா் வடபாதியில் ஸ்ரீவலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் கிராமம் வடபாதியில் அம்பேத்கா் நகா் பகுதி பொதுமக்கள் நிதியுதவியுடன் புதிதாக கட்டப்பட்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி பறக்கவிடப்பட்ட ராட்சத பலூன்

செங்கல்பட்டிற்கு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வருகைதர உள்ளதையொட்டி, அதிமுக சாா்பில் அவருக்கு வியாழக்கிழமை வரவேற்பு பதாகை பொருத்திய ராட்சத பலூன் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகில் இருந்து பறக... மேலும் பார்க்க

கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் (2025-2026) முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது (படம்). நிகழ்வுக்கு ... மேலும் பார்க்க