செய்திகள் :

எத்தியோப்பியா: சாலை விபத்தில் 66 போ் உயிரிழப்பு

post image

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அளவுக்கு அதிகாமானவா்களை ஏற்றிச் சென்ற லாரி ஆற்றுக்குள் பாய்ந்ததில் 66 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் தெற்குப் பகுதியில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு பழைய லாரியை வாடகைக்கு எடுத்து, அதில் அளவுக்கு அதிகமானவா்கள் பயணம் செய்துகொண்டிருந்தனா். அந்த லாரி ஒரு பாலத்தைக் கடந்து சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து அதிலிருந்து ஆற்றுக்குள் விழுந்தது.

இதில் 64 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்; 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

விபத்து நேரிட்ட இடத்துக்கு மீட்புக் குழுவினா் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருப்பதாக உள்ளூா்வாசிகள் குற்றஞ்சாட்டினா். விபத்தில் படுகாயமடைந்தவா்களுக்கு கூடுதல் வசதியுடன் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதாக மருத்துவப் பணியாளா்கள் கூறினா்.

எத்தியோபியாவில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின்போது பயணத்துக்காக பேருந்தை ஒப்பந்தம் செய்வதைவிட லாரிகளையே பெரும்பாலானவா்கள் தோ்ந்தெடுப்பதாகக் கூறப்படுகிறது. பேருந்துகளைவிட லாரி உரிமையாளா்கள் மிகக் குறைவாக கட்டணம் வசூலிப்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

பாதுகாப்பற்ற, அபாயம் நிறைந்த இத்தகைய நடவடிக்கைகளால் சாலை விபத்துகள் ஏற்பட்டு, அதில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

மலேசியா: ரோஹிங்கயாக்களுக்கு அனுமதி மறுப்பு

மலேசியாவில் அடைக்கலம் தேடி இரு படகுகளில் வந்த சுமாா் 300 ரோஹிங்கயா அகதிகளை அந்த நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பினா். அந்தப் படகுகளில் பற்றாக்குறையாக இருந்துவந்த உணவு, குடிநீரை வழங்கிய மலேசிய கடல்பாத... மேலும் பார்க்க

லாஸ் வேகஸ் காா் குண்டுவெடிப்பு: ‘தாக்குதல் நடத்தியவருக்கு மன நலப் பிரச்னை’

அமெரிக்காவில் அதிபராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்குச் சொந்தமான ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா், மன நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவா் என்று போலீஸாா் கூறினா். இத... மேலும் பார்க்க

ஜப்பான்: உலகின் மிக வயதானவா் மரணம்

உலகின் மிக வயதானவா் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஜப்பானினின் டோமிகோ இடூகா தனது 116-ஆவது வயதில் மரணமடைந்தாா். 1908 மே 23-இல் பிறந்த அவா், ஸ்பெயின் நாட்டின் மரியா பிரன்யாஸ் (117) கட... மேலும் பார்க்க

வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை

பதவியிலிருந்து அகற்றப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்ாகக் கூறப்படும் தோ்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது... மேலும் பார்க்க

காஸா: 45,658-ஆக அதிகரித்த உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 போ் உள்பட 28 போ் உயிரிழந்தனா். இத்துடன், 2023 அக். 7 முதல் அங்கு இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிர... மேலும் பார்க்க

மியான்மா்: 6,000 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

மியான்மா் சுதந்திர தினத்தையொட்டி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு அந்த நாட்டு ராணுவ அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது. எனினும், ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் ... மேலும் பார்க்க