லடாக் வன்முறை! போராட்டத்தைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!
என்னைப் போல பேசுவதாக ஆப்பிரிக்க அதிபருக்கு பாராட்டு: சீமான்
சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,
``எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை எங்கே? ஜெயலலிதா ஆட்சியில் வெள்ளை அறிக்கை எங்கே?
நீங்கள் நிறுவிய நிறுவனங்களால் நிலம், காற்று நஞ்சாகி விட்டது. தமிழகம் வளர்ச்சியடைந்து விட்டதென்றால், ஏன் மாதந்தோறும் ரூ. 500, 1000 கொடுக்கிறீர்கள்? உங்கள் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியின்போது, இன்னும் ரூ.1000 சேர்த்து தருமாறு ஒரு மாணவர் கூறுகிறார். இந்த நிலையில்தான் வளர்ச்சி உள்ளது.
36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாகக் கூறுகின்றனர். 3,937 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி வாய்ப்பு; ஆனால், 15 லட்சத்து 52 ஆயிரம் பேர் தெருவில் நிற்கின்றனர்.
உலக அரசியலை உள்ளங்கையில் வைத்திருப்பவர்கள் நாங்கள்; எதையும் பார்த்துப் படிக்கும் கட்சி அல்ல. நான் இங்கு பேசுவதை அங்கு பேசுவதற்காக ஆப்பிரிக்க அதிபர் இப்ராஹிம் டிராரேவை, அந்த நாட்டின் சீமான் என்று புகழ்கின்றனர். இங்கேயோ என்னை பார்த்து சிரிக்கிறீர்கள்.
கல்வி மாநாட்டில் எத்தனை கல்வியாளர்கள்? தாளாளர்கள்? வேந்தர்கள்? துணை வேந்தர்களை அழைத்து புகழ்கின்றனர்?
கடைசி காலத்தில் வாய்க்கு ருசியாகச் சாப்பிடட்டும் என்று என் அப்பா சொல்வார். அதுபோலத்தான், அவர்கள் இருக்கும் கொஞ்ச நாள்களுக்கு அவர்களின் விருப்பத்துக்கு பெயர்களை வைத்துவிட்டுச் செல்லட்டும்.
எல்லா சிலையும் தெருவில் இருக்கிறது; தமிழ்த்தாயின் சிலையை ஏன் இடித்தாய்? ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அந்த வளாகத்துக்கு மூக்கையா தேவர் பெயர் வைக்கவில்லை?
மொட்டையடிப்பதற்கு முன்னால் சீவி, சிங்காரித்து வருவர்; அதுபோலத்தான். நீங்கள் பெயர் வைத்துவிட்டுப் போனால், நான் வந்து மாற்றுவேன்.
காலை உணவுத் திட்டத்தைப் பார்ப்பதற்கு, யாரிடமும் சொல்லாமல் செல்ல வேண்டும். சொன்னால், மாற்றி விடுவார்கள்.
வீட்டில் காலை உணவைக்கூட சாப்பிட்டு வர முடியாத அளவுக்கு இருக்கிறதென்றால், எவ்வளவு வறுமையில் மக்கள் இருக்கின்றனர்? துப்புரவுப் பணியாளருக்கும் காலை உணவு.
இது ஒரு சேவையா? அல்லது இவர்களுக்கு ஒரு வேளை சோறு போட்டு, கையில் ரூ. 500 கொடுத்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?
ரேவந்த் ரெட்டி எடுக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பை இவர்கள் எடுப்பார்களா? நிதி தரவில்லை என்று எல்லாவற்றுக்கும் மத்திய அரசை சாட்டுவது. 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது எதற்கு?’’ என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க:2026 தேர்தல் விஜய்க்கு அரசியல், தேர்தல் என்ன என்பதை புரிய வைக்கும்: எஸ்.வி.சேகர்