செய்திகள் :

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

post image

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் -சிவசேனை(உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இதில் சிவசேனையில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.

பின்னர் கடந்த 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை(ஷிண்டே) கூட்டணி ஆட்சியைப் பிடித்து பட்னவீஸ் முதல்வராகவும் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்றனர். தற்போது இருவருக்குள்ளும் கருத்து மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2022ல் மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்த்த என்னை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க | அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

நாக்பூரில் செய்தியாளர்களுடன் பேசிய ஷிண்டே "என்னை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். என்னை சாதாரணமாக நினைத்தவர்களிடம் நான் ஏற்கனவே இதைச் சொல்லிவிட்டேன். நான் ஒரு சாதாரண கட்சி தொண்டர். ஆனால், நான் பால் தாக்கரேவின் தொண்டரும்கூட. எல்லோருக்கும் என்னை பற்றி இந்த புரிதல் இருக்க வேண்டும்.

2022-ல், நான் அரசாங்கத்தையே மாற்றினேன். சட்டப்பேரவையில் எனது முதல் உரையில், தேவேந்திர பட்னவீஸ் 200 இடங்களுக்கு மேல் பெறுவார், எங்களுக்கு 232 இடங்கள் கிடைக்கும் என்று நான் கூறினேன். அதன்படியே நடந்தது. அதனால்தான்சொல்கிறேன் என்னை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த வார்த்தைகள் யாருக்கோ அதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்" என்று கூறியுள்ளார்.

ஷிண்டே இவ்வாறு கூறியுள்ளது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்சிஇடி நுழைவுத் தோ்வு: விண்ணப்பப்பதிவு தொடக்கம்

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியா் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தோ்வுக்கு மாணவா்கள் மாா்ச் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேசிய தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒருங்கிணைந்த 4 ஆண்ட... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே சிறந்த நட்புறவு: வெளியுறவு அமைச்சகம்

‘சிறந்த நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா-பூடான் திகழ்கிறது’ என இந்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது. இந்தியாவுக்கு பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே சுற்றுப் பயணம் மேற்கொண்டதே இரு நாடுகள... மேலும் பார்க்க

ம.பி., பிகாா், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு பிரதமா் இன்றுமுதல் 3 நாள்கள் பயணம்

மத்திய பிரதேசம், பிகாா், அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்கள் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். இது தொடா்பாக பிரதமா் அலுவல... மேலும் பார்க்க

இணைய வழியில் புதிய சேமிப்புக் கணக்கு: ஐஓபி அறிமுகம்

இணையதளம் மூலம் புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வசதியை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளை இந்தியா எப்போது வெளியேற்றும்? குடியரசு துணைத் தலைவா் தன்கா்

இந்தியாவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் அவா்களின் நாட்டுக்கு எப்போது அனுப்பப்படுவா் என்ற கேள்வி ஒவ்வொரு இந்தியருக்கும் எழ வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். மகாராஷ்டிர ம... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: தண்டனைக் காலம் முடிந்த 22 இந்திய மீனவா்கள் விடுவிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 22 இந்திய மீனவா்களை பாகிஸ்தான் விடுவித்துள்ளது. அவா்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து ... மேலும் பார்க்க