என்ன, பொங்கலுக்கு மழை பெய்யுமா?
கடல் பரப்பில் நிலவும் மேலடுக்கு சுழற்சி ஜனவரி 12 - 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைப்பொழிவை கொடுக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
மழை மற்றும் வானிலை குறித்து எளிய மக்களுக்கும் புரியும் வகையில் பல்வேறு தகவல்களை ஆழமாகவும் எளிமையாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாக அளித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான், இன்று தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், தமிழகத்துக்கு ஜனவரி 12 - 16ஆம் தேதி வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைப் பெய்யும். மாஞ்சோலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த நாள்களில் மழை பெய்வது என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். கடலோரப் பகுதிகளான சென்னை முதல் டெல்டா வரை மற்றும் தூத்துக்குடி பகுதிகளிலும் மழை பெய்யும்.