செய்திகள் :

``என் உயிருக்கு அச்சுறுத்தல்'' - திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சி பகீர் புகார்

post image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில், அஜித்குமார் மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகங்கை காவல் மரணம் - ஹென்றி திபேன்
சிவகங்கை காவல் மரணம் - ஹென்றி திபேன்

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட மாநில அரசு, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தனிப்படைக் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் ஏற்கெனவே பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக இருப்பது வீடியோதான். இந்நிலையில், அஜித்குமாரை தாக்கும் அந்த வீடியோவை எடுத்த முக்கிய சாட்சியான சத்தீஸ்வரன் என்பவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பரபரப்புக் கிளம்பியிருக்கிறது.

இதுதொடர்பாக டிஜிபியிடம் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்புக் கோரி (witness protection) மனு கொடுத்திருக்கும் சத்தீஸ்வரன், "இந்த வழக்கில் S. ராஜா என்ற தனிப்படைகாவலர் கடந்த காலங்களில் சரித்திர குற்றப்பின்னணி உடைய ரவுடிகளுடன் நேரடியாக நெருங்கிய தொடர்பு கொண்டவர்;

சத்தீஸ்வரனின் கடிதம்

அஜித்குமாரின் 'Torture Footage' எடுத்து நீதிமன்றதில் வழங்கிய காரணத்தால் எனக்கும், என்னைச் சார்ந்தோரின் உயிர் - உடமைக்குக் கடும் அச்சுறுத்தல் உள்ள காரணத்தால் இவ்வழக்கில் சாட்சியாக இருக்கும் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் நீதிமன்ற உத்திரவின்படி ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவது அவசியமானதாகும்." என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த வழக்கில் ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ராஜா என்பவர் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்றம்பள்ளி: விகடன் செய்தி எதிரொலி; பொதுமக்களுக்கு நிழற்குடை அமைக்கும் பணியில் அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதியில் ... மேலும் பார்க்க

Rain Alert: இரவில் கொட்டித் தீர்த்த மழை; இன்று மழை எப்படி இருக்கும்? வானிலை சொல்வது என்ன?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. போரூர், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு, முகப்பேர், தியாகராயநகர், அரும்பாக்கம், கிண்டி, அடையாற... மேலும் பார்க்க

குப்பைக்கூளம்... சுகாதார சீர்கேடு; மக்களை முகம் சுளிக்க வைக்கும் பிராட்வே பேருந்து நிலையம்!

சென்னை பிராட்வேயில் இயங்கிவரும் பேருந்து நிலையம் நவீனமாக்கப்பட்ட பல்நோக்கு போக்குவரத்து வளாகமாக மேம்படுத்தப்பட இருப்பதால், தற்காலிகமாக ராயபுரத்தின் மேம்பாலாத்திற்கு அருகில் 3.45 ஏக்கர் பரப்பளவில் பேரு... மேலும் பார்க்க

``என்னால் கூட ஆட்சியரிடம் பேச முடியவில்லை; சாமானிய மக்களின் நிலை..'' - MLA ஜெயசீலன் சொல்வதென்ன?

திஷா கமிட்டி எனப்படும் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் இன்று காலை தொடங்கியது.நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உற... மேலும் பார்க்க

"அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது" - திருமாவளவன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில்,... மேலும் பார்க்க

துர்கை கோயில் இடிப்பு; சாடிய இந்தியா... விளக்கமளித்த வங்கதேச அரசு!

வங்காளதேச நாட்டிலுள்ள டாக்காவிலிருக்கும் கில்கெட் பகுதியில் துர்கை கோயில் இடிக்கப்பட்டதற்கு தெளிவான காரணங்களை தெரிவித்துள்ளது வங்காளதேச அரசு. ரயில்வேவுக்கு சொந்தமாய் பாத்தியப்பட்ட நிலத்தில் ரயில்வே நி... மேலும் பார்க்க