செய்திகள் :

"என் தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர்..." - மதிமுக பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகல்

post image

மதிமுக நிர்வாக குழு கூட்டம் நாளை (ஏப்ரல் 20) சென்னையில் நடைபெறும் நிலையில், கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக வைகோவின் மகனும், திருச்சி எம்.பி-யுமான துரை வைகோ அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் துரை வைகோ, "நம்முடைய இயக்கத் தந்தை அரசியலுக்கு வந்து இழந்ததுதான் அதிகம். அவர் பெற்றது தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும் "வாழ்நாள் போராளி" என்கிற விருது மட்டும்தான்.

மதுவிலக்கு போராட்டத்தில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட எனது பாட்டி மாரியம்மாள் அதனாலயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்.

தலைவர் வைகோ மீது பழிச்சொல்லை வீசியதை தாங்க முடியாமல்தான் எங்கள் உறவினர் ஒருவர் உயிர் தியாகம் செய்தார்.

வைகோ-துரை வைகோ
துரை வைகோ

சிவகாசி இரவி தீக்குளித்த போது எழுந்த மன வேதனையில் இருந்து தலைவர் மீள்வதற்குள் எங்கள் குடும்பத்தில் இந்த துயரமும் நிகழ்ந்தது.

அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது. அதைக்கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர்.

நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில், கட்சியின் 'முதன்மை செயலாளர் "என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை.

எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன்.

ஆனால், அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன்.

என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவுகூட சேதாரம் வந்து விடக்கூடாது என்றுதான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

அதே நேரத்தில் மறுமலர்ச்சி தி.மு.க-வின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றிபெறச் செய்து தங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள்.

அந்த மக்களுக்காக ஒரு எம்.பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

துரை வைகோ
துரை வைகோ

கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கிவிடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

கோவையில் நயினார் நாகேந்திரனுக்கு வரவேற்பு; அண்ணாமலை மிஸ்ஸிங் டு மேடையில் வெளியான அறிவிப்பு!

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை மண்டல பாஜக சார்பில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. நயினார் வருவதற்... மேலும் பார்க்க

'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' - நயினார் நாகேந்திரன்

கோவை காளப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அந்தக் கட்சியினர் சார்பில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “கூட்டணி, எத்தன... மேலும் பார்க்க

'கூட்டணி வேறு... கொள்கை வேறு; வக்பு சட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளோம்' - வேலுமணி

கோவை அதிமுக சார்பில் நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமண க... மேலும் பார்க்க

'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனிவாசன்

பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் கோவை வருகை புரிந்தார். அவருக்கு கோவை பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெ... மேலும் பார்க்க

`இறந்து' விட்டதாக இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு; ஆம்புலன்ஸில் திடீரென அசைந்த உடல்... என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், தோகைபாடியை சேர்ந்தவர் பிரகாஷ். மிகுந்த உடல் நலக்குறைகளுடன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 10 நாள்களாகத் தீவிர சிகிச்சை பெற்று ... மேலும் பார்க்க

`மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு'- மராத்திக்காக பகையை மறந்து கூட்டணி சேரும் தாக்கரே சகோதரர்கள்?

மகாராஷ்டிரா பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5வது வகுப்பு வரை வரும் கல்வியாண்டில் இருந்து இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் மாநில அரசு கூடுதலாக ஒ... மேலும் பார்க்க