செய்திகள் :

“என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்திப் போடணும், கண்ணு வெச்சிடாதீங்க ப்ளீஸ்...”- குஷ்பு நெகிழ்ச்சி

post image
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சோனு சூட் மற்றும் மறைந்த நடிகர்களான மனோபாலா, மணிவண்ணன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'மதகஜராஜா' திரைப்படம் 12 வருடங்களுக்குப் பிறகு இன்று திரையில் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே நேற்று (ஜனவரி 11)மதகஜராஜா திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்டது. அந்தக் காட்சிக்கு குஷ்புவும் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்புவிடம் சுந்தர் சி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த குஷ்பு, " என் வீட்டுக்காரருக்கு திருஷ்டிதான் சுத்திப் போடணும். கண்ணு வெச்சுடாதீங்க ப்ளீஸ். இந்தப் படத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல.

குஷ்பு
குஷ்பு

ஆனா ஒரு விஷயம் 12 வருஷத்துக்கு முன்னாடி அவர் இந்தப் படத்துக்கு எவ்வளவு உழைச்சாருன்னு எனக்குத் தெரியும். அதற்கான வரவேற்பை நீங்க இப்பக் கொடுக்குறீங்க. இந்தப் படத்தைப் பார்க்கும்போது 12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படம் மாதிரி இல்ல. இப்ப எடுத்த படம் மாதிரிதான் இருக்கு. சுந்தர் சியை என்டர்டெயின்மென்ட் கிங்னு சொல்லுவாங்க. அதை மறுபடி மறுபடி நிருபிச்சுக்கிட்டே இருக்காரு.அதனால வீட்டுக்குபோய் எங்க அத்தைகிட்ட திருஷ்டி எடுக்க சொல்லணும்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Soori: 'எனது வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் இது' - 'விடுதலை 2' வெற்றி குறித்து சூரி நெகிழ்ச்சி

'விடுதலை-1' வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையில் உருவான 'விடுதலை- 2' டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

Vetrimaaran - Dhanush: மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - வெளியான தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மாதம் `விடுதலை பாகம் 2' திரைப்படம் வெளியாகியிருந்தது.சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணால், கிஷோர் எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த விடுதலை படத்தின் பாகம் 1... மேலும் பார்க்க

Ajithkumar: 'திராவிட மாடல் அரசின்...'- அஜித்தை வாழ்த்திய உதயநிதி

நடிகர் அஜித்துக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது. இதனை அஜித் ரசிகர... மேலும் பார்க்க

Ajithkumar: `Game Starts' - துபாய் ரேஸில் ஜெயித்த அஜித் -குவியும் வாழ்த்துகள்

துபாயில் நடந்து முடிந்திருக்கும் 24H ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி 922 போர்ஷே பிரிவில் 3ம் இடம் பிடித்திருக்கிறது.துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித் கலந்துக்கொண்டிருந்தார். கார் ரேஸ் தொடங்குவத... மேலும் பார்க்க

மதகஜராஜா விமர்சனம்: ‘சிரிங்க சிரிங்க சந்தோஷமா இருங்க’ - சுந்தர்.சி-யின் கலகல பார்முலா க்ளிக்காகிறதா?

மதகஜராஜா (விஷால்), கல்யாண சுந்தரம் (சந்தானம்), ரமேஷ் (சடகோபன் ரமேஷ்), சண்முகம் (நிதின் சத்யா) ஆகிய நால்வரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். அவர்களது பள்ளிப்பருவக் கால பி.டி வாத்தியாரின் மகளின் திருமணத்தி... மேலும் பார்க்க