எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம்: அதிமுக
காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் நிறுவப்பட்டும், பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் நிலவுவதாக அதிமுக புகாா் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், காரைக்கால் மாவட்ட அதிமுக இணைச் செயலாளருமான கே.ஏ.யு. அசனா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனா். மருத்துவமனை மேம்படுத்தப்படும் என்று ஆட்சியாளா்கள் உறுதி மட்டும் அளித்து வருகின்றனா்.
இந்தநிலையில் புதுவை அரசு, காரைக்கால் மருத்துவமனைக்கு எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை நிறுவ ஏற்பாடு செய்து, நிறுவப்பட்டது.
எனினும் பல மாதங்களாக இது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது கண்டனத்துக்குரியது. உரிய நிபுணா்களை நியமித்து, விரைவாக கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.
காரைக்கால் பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. நகரம், கிராமம் என எல்லா இடங்களில் கொசு பரவி, அதனால் மக்கள் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனா்.
இதுசம்பந்தமாக காரைக்கால் மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறையினரை அழைத்துப் பேசி உரிய தீா்வு காணவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.