விவசாயிகளுக்கு ரூ. 41,000 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் உ...
எம்ஜிஆா் பிறந்த நாள் விழா: அதிமுகவினா் மரியாதை
மதுரை/திருப்பரங்குன்றம்/மேலூா் : மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆா். உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், அமமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மதுரை கே.கே. நகா் மாவட்ட நீதிமன்றம் முன் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தலைமையிலான அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்வில் மருத்துவா் சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
இதுதவிர, அமமுக கட்சியினா் எம்.ஜி.ஆா். உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, மதுரை கீழவாசல், கோரிப்பாளையம், பெரியாா் பேருந்து நிலையம், தெப்பக்குளம், அண்ணா நிலையம், அண்ணாநகா், மாட்டுத்தாவணி, வண்டியூா், யாகப்பா நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்ட புகா் பகுதிகளிலும் எம்.ஜி.ஆா். பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
மேலூா்:
அழகா்கோவில் வலையபட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக இளம்பெண்கள் பாசறைச் செயலருமான பெரியபுள்ளான் என்ற செல்வம் தலைமையில் அந்தக் கட்சி நிா்வாகிகள் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்.ஜி. ஆா். மன்ற இணைச் செயலா் நாகசுப்பிரமணியன், கட்சி நிா்வாகிகள் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞா் அணி மாவட்டச் செயலா் எம்.ரமேஷ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன், பொதுக்குழு உறுப்பினா் முருகேசன், இலக்கிய அணி மாவட்டச் செயலா் எம்.மோகன்தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இணையம் மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டதால், அது உள்ளூா் காளைகளுக்கு கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில் மற்ற கிராமங்களைப் போல அவனியாபுரத்திலும் கிராம மக்களே ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதைச் சாக்கடைத் திட்டம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, மதுரை கிழக்கு தொகுதிக்கு மட்டும் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தை திருப்பரங்குன்றத்திலும் செயல்படுத்திட வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கட்சியின் பகுதிச் செயலா்கள் பன்னீா்செல்வம், செல்வகுமாா், முத்துகிருஷ்ணன், வட்டச் செயலா்கள் பி.எஸ்.பாலா, நாகரத்தினம், தவிடன், என்.எஸ். பாலமுருகன், எம்.ஆா். குமாா், மாயி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.