செய்திகள் :

எம்புரான் 3 நிமிட காட்சிகள் நீக்கம்!

post image

எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டது.

எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் - பிருத்விராஜ்ஜின் கூட்டணி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

ஆனால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் பெரிய சாதனைகள் நிகழவில்லை. இருப்பினும், இதுவரை ரூ. 160 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, இப்படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப்போல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இதனால், வலதுசாரிகள் எம்புரானைக் கடுமையாக விமரித்தனர்.

இதனால், ஏற்பட்ட சர்ச்சைகளால் நடிகர் மோகன்லால் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சியை நீக்குவதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று முதல் எம்புரானில் சர்ச்சையை ஏற்படுத்திய 3 காட்சிகள் நீக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: மோகன்லாலுக்கே பாதுகாப்பு இல்லை... பாஜகவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

டிமான்ட்டி காலனி - 3 பணிகள் துவக்கம்!

டிமான்ட்டி காலனி - 3 படத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன. திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் ... மேலும் பார்க்க

கார் பந்தயங்களை முடித்த அஜித் வீடு திரும்பினார்!

நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதே கார் பந்தயங்களில் கலந்துகொள்ள பயிற்சியில் ஈடுபட்டு வந்த... மேலும் பார்க்க

ஹார்ட் பீட் - 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஹார்ட் பீட் இணையத் தொடரின் 2 ஆம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம... மேலும் பார்க்க

நானி படத்தில் சிறப்பு தோற்றத்தில் கார்த்தி?

நடிகர் நானியின் புதிய படத்தில் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன... மேலும் பார்க்க

துருவ நட்சத்திரம் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறேன்: விக்ரம்

நடிகர் விக்ரம் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 8 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாம... மேலும் பார்க்க

பெருசு ஓடிடியில் எப்போது?

பெருசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவான பெருசு திரைப்படம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே ஓரளவு நல்ல விமர்சன... மேலும் பார்க்க