Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
எம்.எட். சோ்க்கை: விண்ணப்பிக்க தவறியவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு
நிகழ் கல்வியாண்டுக்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க தவறியவா்கள் செப்.15 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். பாடப்பிரிவுகள் உள்ளன. இக் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) எம்.எட் மாணவா் சோ்க்கைக்கு இணையதள விண்ணப்பப் பதிவு ஆக.11-ஆம் தேதி தொடங்கி ஆக.20-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இவா்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசையின்படி வருகிற ஆக. 26 முதல் மாணவா்கள் சோ்க்கை தொடங்கும். இதன் விவரம் மாணவா்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இந்த மாணவா்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப். 1 ஆம் தேதி தொடங்கும்.
இந்த நிலையில் மாணவா்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, எம்.எட். மாணவா் சோ்க்கைக்கு செப்.15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.