செய்திகள் :

"எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காமல் யாரும் அரசியல் செய்ய முடியாது”- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

post image
தூத்துக்குடியில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்திடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம் ஆகிய தாலுகாக்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர் மானாவரி விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த புரட்டாசி முதல் வாரத்தில் இந்த நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சூரிய காந்தி போன்ற பயிர்களை பயிரிட்டனர்.

கடம்பூர் ராஜூ

இதில் உழவு, களை பறிப்பு, மருந்து தெளிப்பு, உரமிடுதல் என  ஏக்கர் ஒன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய்  வரை செலவு ஏற்பட்டுள்ளது. இது தவிர குருத்துப்பூச்சி தாக்குதல், காட்டுப்பன்றிகளால் சேதம்  என பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பெருமழையால் குறைந்தகால வித்துக்களான உளுந்து, பாசி, கொத்தமல்லி, வெங்காயம் மிளகாய் போன்றவைகள் வெள்ளச்சேதம் ஏற்பட்டு அழுகி விட்டது. இது தவிர பல கிராமங்களில் குளம், குட்டைகள் நிரம்பி மறுகால் பாய்ந்து மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், சூரியகாந்தி போன்ற பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஐந்து ஏக்கர் என்ற வரம்பைத் தளர்த்தி முழுமையாக நிவாரணம் வழங்கப்பட்டது.

ஆனால்,  கடந்த 2023-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் விவசாயி எத்தனை ஏக்கர் பயிரிட்டு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அதிகபட்சமாக ஐந்து ஏக்கர் வரை மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது. இதனால் ஐந்து ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.  கடந்த ஆண்டைப் போல் ஐந்து ஏக்கர் என்ற வரம்பு நிர்ணயம் செய்யாமல் விதிகளை தளர்த்தி பாதிக்கப்பட்ட அனைத்து நிலங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மக்கள் தலைவர். அரசியல் இயக்கத்தில் இந்தியாவிலேயே ஒரு இயக்கத்தை ஆரம்பித்தவுடன் முதல் பொதுத் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற வரலாற்றை படைத்தவர்.  

கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் மட்டுமில்லாமல் தென்னிந்தியாவிலே முதல் தேர்தலில் ஆட்சி அமைத்தது மட்டும் இல்லாமல் மூன்று தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று அவர் மறைகின்ற வரை வெற்றிக்கொடி நாட்டியவர். அவர் மறைந்து 38 ஆண்டுகளை தாண்டிச் சென்றாலும் கூட இன்றைக்கும் கூட அவரை ஒப்பிடுகின்ற அளவிற்கு மக்கள் மனதிலே இடம் பிடித்த மகத்தான தலைவராக இருக்கின்ற காரணத்தினால் அவர் பெயரைச் சொல்லாமல் இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் யாரும் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிக்காமல் அரசியல் செய்ய முடியாது. அதனால்தான் எம்.ஜி.ஆருடன் பிரதமர் மோடியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.” என்றார்.   

'ஸ்டாலினே முழு பொறுப்பு!' - பாலியல் தொந்தரவு வழக்கில் மாணவி பெயர் வெளியானதற்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒரு பாலியல் தொந்தரவுக்கு உள்ளான தகவல் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று மாணவியின் பெயர் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும், அ... மேலும் பார்க்க

சான்டா வேடமிட்ட உணவு டெலிவரி ஊழியர்; வற்புறுத்தி ஆடையை கழற்றச் செய்த இந்து அமைப்பினர்- என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு சான்டா கிளாஸ் ஆடையை அணிந்திருந்தார். அவரை 'இந்து ஜாக்ரன் மஞ்ச்' எனும் குழு தடுத்து நிறுத்தி, அவர... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் தினத்தில் உக்ரைன் மீது தாக்குதல்; `மனிதாபிமானமற்ற செயல்'- ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம்!

உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்றைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகை தினத்தன்று உக்ரைன் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலமாக ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆருக்குப் பிறகு பெண்களின் ஆதரவைப் பெற்ற ஒரே தலைவர் ஸ்டாலின்தான்!’ – அமைச்சர் சி.வெ.கணேசன்

கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டக் கழக செயற்குழு ஆலோசனைக் கூட்டம், தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் ... மேலும் பார்க்க

"தமிழ்நாடு என்ற பெயரைக் 'கஞ்சா நாடு' என மாற்றலாம்..." - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தென் மாவட்டங்களில் பல பிரச்னைகள் இருந்து வரு... மேலும் பார்க்க