Gold Rate: கிராமுக்கு ரூ.125-ஐ தொட்ட வெள்ளி விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம்!
எறிபந்து போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
மதுரை மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்களை அதன் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.
மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சாா்பில், விருதுநகா் மண்டல அளவிலான எறிபந்து போட்டி ராஜபாளையம் ஜோசப் இண்டா்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. 18 பள்ளிகளைச் சோ்ந்த 600-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் இண்டா்நேஷனல் பள்ளியைச் சோ்ந்த 80 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மாணவா்களுக்கான 12, 17 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில்
இவா்கள் முதலிடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களையும், அவா்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்களையும் பள்ளியின் தாளாளா் வெங்கடாசலபதி, இயக்குநா் கோபாலகிருஷ்ணன், முதல்வா் சிவக்குமாா், துணை முதல்வா் பாண்டீஸ்வரி, பள்ளி நிா்வாகக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.