``எல்லாவற்றையும் கூகுள், AI பார்த்துக்கொள்ளும் என்று மெத்தனமாக இருக்க வேண்டாம்'' - ஸ்டாலின் அறிவுரை
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் ரூ. 277 கோடி மதிப்பில் பாரத் சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் 243 புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார் முதல்வர்.

இவ்விழாவில் AI தொழில்நுட்பம் குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
"எதுவானாலும் கூகுள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திடம் கேட்கலாம் என்ற மெத்தனத்தில் இருந்துவிடக்கூடாது.
மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவை மேம்படுத்த வேண்டும் என்பது நமது கடமை.
தேவையற்ற தகவல்கள் தற்போது அதிகமாகியுள்ளது. குழந்தைகளுக்கு சரியான விஷயத்தைக் கற்று தர வேண்டும்.
தொழில்நுட்பம், மனித சந்ததிக்கான வேறுபாட்டை உணர்த்த வேண்டும்" என்றார்.
மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
இதைத்தொடர்ந்து புதிய ஆசிரியர்கள் பற்றி முதல்வர் கூறியதாவது:
"மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்கு வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துகள்.
மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பார்கள். ஆனால், ஆசிரியர்களுக்கே பாடம் எடுத்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவர் அல்ல; ஆசிரியர் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள்.

மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவை மேம்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.
பாடப்புத்தகத்தைத் தாண்டி சமூக ஒழுக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு உடல்நலமும் மனநலமும் முக்கியம்.
அவர்களின் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்," என்று பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs