செய்திகள் :

எழும்பூர்: அம்பேத்கர் அரசுப் பள்ளியைச் சுற்றி இத்தனை இடர்களா... கண்டுகொள்ளுமா அரசு?!

post image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையேயுள்ள ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி, டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியை ஒட்டியுள்ள தண்டவாளத்தில் குறைந்தது 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலாவது சென்றுகொண்டிருப்பதால் அதன் இரைச்சல் சத்தத்தால் இங்கு பயில்கின்ற மாணவ மாணவியர் சிரமப்படுகின்றனர்.

டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி - எழும்பூர்

போதாக்குறைக்கு புதிய தண்டவாளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதால் பள்ளிக்கும் தண்டவாளத்துக்கும் இடையே கட்டப்பட்டுள்ள புதிய தடுப்புச் சுவரில் பாதி இடிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வளாகத்துக்கு முன்பு பாதாள கழிவுநீர் கால்வாய் உள்ளது. அதற்கு மேல உள்ள சிமென்ட் கட்டுமானத்தில் ரயில்வே பணிகளுக்காக வாகனங்கள் சென்று அதன் ஒரு பகுதி சேதமாகி கம்பிகள் வெளியே தெரிகின்றன.

எழும்பூர்

அதை முழுமையாக அடைக்காமல் அதற்கு மேலே சாக்கு மூட்டை, மரப்பலகை போன்றவற்றை வைத்து பெயரளவுக்கு அடைத்துள்ளனர். இதற்கு அருகில்தான் பள்ளியிலிருந்து மேம்பாலத்தின் வழியாகப் பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் செல்வதற்கான படிக்கட்டு இருக்கிறது. அந்தப் படிக்கட்டுமே சுகாதாரமற்ற நிலையில் குப்பைகள், மழைநீர் தேங்கி பாசி படிந்து மோசமான நிலையில் உள்ளது.

பள்ளிக்கு வருகிற மற்றொரு முக்கியப் பாதையில், கூவம் நதிக்கரையில் நடைபெறும் பணிகள் மற்றும் ரயில்வே பணிகளுக்காக வாகனங்கள் சென்று அந்த பாதையே மணலால் மூடப்பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களில் அந்த இடமே சகதியாக மாறிவிடுகின்றன. மேலும், இந்தப் பள்ளியின் வகுப்பறையை ஒட்டி ஜன்னல் அருகே கட்டப்பட்டுள்ள திறந்தவெளி கால்வாயில் கழிவுநீர் தேங்கியுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி - எழும்பூர்

கூவம் நதிக்கரையோரம் நடந்துவரும் பணிகளால் பள்ளிக்குப் பின்புறம் உள்ள தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளியானது பாதுகாப்பு இல்லாமல், எந்நேரமும் அந்நியர்கள் உள்ளே நுழைவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (13.11.2024) இந்தப் பள்ளியை ஆய்வு செய்ய வந்த பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் இது குறித்த கேட்டபோது, ``நாங்கள் படிக்கிற காலத்தில் மரத்தடியில உட்கார்ந்துதான் படிச்சோம். எனக்கு மாணவர்கள் நன்றாகப் படிக்கணும் அவ்வளவு தான். இங்கு நடைபெறுகிற பணிகள் மற்ற துறை சம்பந்தப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்." என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

திருப்பத்தூர்: `உள்ள நுழைய கூட முடியாது’ - வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசமான நிலையில் கழிவறை

திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் வந்து பார்வையிட்ட கழிவறை, மூன்றே மாதங்களில் மீண்டும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது.தற்போது இது எவ்வித பராமரிப்பின்றி மிக அசுத்தமான நிலையில் ‌தூ... மேலும் பார்க்க

நெல்லை: சேரும் சகதியுமான சாலைகள்; நடந்து செல்வதே சாகசம்தான்... அவதியில் ராதாபுரம் மக்கள்..!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட ப்ரைட் நகர் பகுதியில் சுமார் 120 வீடுகள் வரை இருக்கின்றன. இந்தக் குடியிருப்பு பகுதியில் உள்ள பாதைகள் அனைத்தும், முறையாகச் சாலைகள் அமைத்துத் தரப்படாமல், ... மேலும் பார்க்க

குமரி: திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே கட்டப்பட்டு வரும் கண்ணாடிப் பாலம்! | Album

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம்திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம்திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் மேலும் பார்க்க

``பணத்தை கேட்டால் பிணம்தான்... மிரட்டும் அமைச்சரின் உதவியாளர்'' - எஸ்.பி-யிடம் புகார் அளித்த பெண்

மயிலாடுதுறை சின்ன கண்ணாரத் தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளரான வேதா ஸ்ரீநிவாஸ் என்பவர்மீது ராணிப்பேட்டை எஸ்.பி-யிடம் புகார் மனு ஒன்றைக் க... மேலும் பார்க்க

“அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை செயல்பாட்டுக்கு வரும்! ” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்பட... மேலும் பார்க்க

கிண்டி: "நலமுடன் இருக்கிறேன்; முதல்வரிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்..." - மருத்துவர் பாலாஜி

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜியை, விக்னேஸ்வரன் என்பவர் நேற்று (நவம்பர் 13) காலை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இ... மேலும் பார்க்க