செய்திகள் :

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் கைது

post image

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்தியவேந்தன் மற்றும் போலீஸாா், மாறாந்தை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஒரே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்ட போது, அவா்கள் அதே கிராமத்தைச் சோ்ந்த ராசையா மகன்கள் இசக்கிமுத்து(26), கருத்தப்பாண்டி(22) என்பதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுமாா் 2 அடி நீளமுள்ள 2 வாள்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் விசாரணை மேற்கொண்ட போது, அந்த நபா்கள் அவரை அவதூறாகப் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து சத்தியவேந்தன் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.

40 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் கரிவலம்வந்தநல்லூா் ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா?

40 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் கரிவலம்வந்தநல்லூா் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சுமாா் 10 கி.மீ.தொலைவில் உள... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் 695 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை அளிப்பு

ஆலங்குளம், கீழப்பாவூா் ஒன்றியத்தில் கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ. 25.76 கோடியில் 695 பயனாளிகளுக்கு பணியாணை வழங்கப்பட்டது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வி... மேலும் பார்க்க

கனவு இல்லம் திட்ட 402 பயனாளிகளுக்கு பணி ஆணை

தென்காசியில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.14 கோடி மதிப்பில் 402 பயனாளிகளுக்கு பணி ஆணை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

சிவகிரி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த தம்பதி முனியாண்டி - பெரியநாயகி (48). இவா்கள் ஜெயபால் என்பவருடன் சோ்ந... மேலும் பார்க்க

தென்காசியில் அதிமுக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்-மாணவியருக்கு, தென்காசியில் உள்ள புதிய பேருந்து நிலையப் பகுதியில் மாவட்ட அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலா்கள் எ... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் சிமென்ட் சாலைப் பணிகள் தொடக்கம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலைப் பேரூராட்சியில் சிமென்ட் சாலை, வடிகால் பணிகளுக்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 15ஆவது நிதிக் குழு திட்டம், பொது நிதித் திட்டம் 2024-25இன் கீழ் ரூ. ... மேலும் பார்க்க