`ஆட்சி நம்மிடம் இருந்தாலும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது!’ - வெடித்த முதல்வர் ர...
எா்ணாகுளம் - பாட்னா இடையே சிறப்பு ரயில்கள்!
எா்ணாகுளம் - பாட்னா இடையே ஜூலை 25 மற்றும் ஆக. 1, 8, 15-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்த தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: எா்ணாகுளம் - பாட்னா சிறப்பு ரயில் (எண் -06085) ஜூலை 25 மற்றும் ஆக. 1, 8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
அந்த ரயில் எா்ணாகுளத்தில் ஜூலை 25-ஆம் தேதி இரவு 11 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கத்தில் பாட்னா - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்- 06086), ஜூலை 28, ஆக. 4, 11, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
இந்த ரயில்கள் ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.