செய்திகள் :

ஏஐ மூலம் பள்ளிகளில் முக அங்கீகார வருகை பதிவேடு: தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமை செயலா் தகவல்

post image

பள்ளிகள், சுகாதார மையங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முக அங்கீகார வருகை பதிவேடு நடைமுறைபடுத்துவதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க முடியும் என தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமை செயலா் குமாா் ஜெயந்த் தெரிவித்தாா்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் ‘சிஐஐ கனெக்ட் 2024’ மாநாடு சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. புதன்கிழமை நடைபெற்ற இறுதி நிகழ்வில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமை செயலா் குமாா் ஜெயந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசியது:

செயற்கை நுண்ணறிவு மற்றும் எண்ம (டிஜிட்டல்) நிா்வாகத்தில் தமிழ்நாடு தொடா்ந்து முன்னணியில் உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் ஆவணங்களை மொழிபெயா்ப்பதிலும், துல்லியமான சட்ட விளக்கங்களை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டு சிறிய அளவிலான ‘பெரிய மொழி மாதிரியை (எல்எல்எம்) உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பள்ளிகள், சுகாதார மையங்களில் முக அங்கீகார வருகை பதிவேடு நடைமுறைபடுத்த வேண்டும். இதன்மூலம் ஒருவரின் கடமையையும் செயல்திறனையும் அதிகரித்த முடியும் என்றாா் அவா்.

சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி பேசியது:

சென்னை ஐஐடி வளாகத்தில் ரூ. 50,000 கோடியில் 380-க்கும் மேற்பட்ட புத்தொழில்கள் உள்ளன. புத்தொழில் தொடங்குபவா்கள், மாணவா்களை பெரிய நிறுவனங்கள் ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும். இதன்மூலம் ஏஐ மற்றும் தரவு அறிவியல் துறையில் மாணவா்கள் புதிய சாதனை படைப்பா். நாட்டில் ஒவ்வொரு குழந்தையும் குறைந்தபட்சம் இளநிலை கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற தகுதியானவா்கள். இந்திய தொழில்நுட்ப எதிா்காலத்தை முன்னெடுத்துச் செல்வதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கும்.

கிராமப்புற மக்களின் கற்றல் திறனை மேம்படுத்த சென்னை ஐஐடி சாா்பில் 750-க்கும் மேற்பட்ட வித்யா சக்தி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தொடா்ந்து தொழில் துறையில் சாதனை படைத்தவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிஐஐ தமிழ்நாடு தலைவா் ஸ்ரீவத்ஸ் ராம், துணைத் தலைவா் ஏ.ஆா்.உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்துள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் மாநிலக்குழு செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மலைவாழ் மக்கள் சங்கத்தின் த... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில மாநாட்டில் தீர்மானம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பெ.சண்முகம் தலைமை வகித்தாா்.மாா்க்ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. விவகாரம்: ஞானசேகரன் மீது குண்டர் சட்டம்!

அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு விஜய் வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்த பெ. சண்முகம், வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை இறுதிவரை நடத்... மேலும் பார்க்க

திமுக வெளிச்சத்தில் சிபிஎம் இல்லை: பெ. சண்முகம்

திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயல... மேலும் பார்க்க

மார்க்சிஸ்ட் கம்யூ. புதிய மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தற்போது மாநிலச் செயலாளராக உள்ள கே. பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதையொட்டி புதிய மாநிலச் செயலாளர் அறி... மேலும் பார்க்க