திமுக வெளிச்சத்தில் சிபிஎம் இல்லை: பெ. சண்முகம்
திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பதவிக்காலம் முடிவதையொட்டி புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | மார்க்சிஸ்ட் கம்யூ. புதிய மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பெ. சண்முகம் பேசியதாவது,
''உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம்.
மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் மக்கள் விரோத நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது. வேலைவாய்ப்பை பறிக்கும் நடவடிக்கைகளில்தான் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது'' என்றார்.
முரசொலி கட்டுரை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ''திமுக வெளிச்சத்தில் சிபிஎம் இல்லை; அப்படிக் கூறுவது பொறுத்தமற்றது. மக்களுக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். போராட்டங்களுக்கு அனுமதி மறுக்க எந்தவொரு அரசுக்கும் உரிமையில்லை.
மதவெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?