சாதிவாரிக் கணக்கெடுப்பு: சமத்துவத்தை உறுதி செய்துள்ளது பாஜக அரசு!
ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்க: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு
புதுதில்லி: சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பெரும்பாலும் ரூ.500 நோட்டுகளே நிரப்பப்படுகிறது. ஆனால் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் கிடைப்பதில்லை. இதனால் ரூ.500 நோட்டுகளை ரூ.100, ரூ.200 நோட்டுகளாக மாற்றுவதற்கு மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.
இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில், அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா தீ விபத்தில் தமிழர்கள் பலி: முதல்வர் இரங்கல்!
இதுதொடர்பாக வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
செப்டம்பர் 30-க்குள் அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் 75 சதவிகிதம் ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், 2026 மார்ச் மாதத்திற்குள் ஏடிஎம் இயந்திரங்களிலும் இதனை 90 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.
எடிஎம் இயந்திரங்களில் அதிகளவில் ரூ.500 நோட்டுகள் மட்டும் விநியோகிக்கப்படுவதால் அதனை ரூ.100, ரூ.200 நோட்டுகளாக மாற்றுவதற்கு மக்கள் சிரமங்களை சந்திக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் பணப்புழக்கத்தை மக்களிடையே அதிகப்படுத்தும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.