செய்திகள் :

ஏன் சனிக்கிழமை மட்டும் பிரசாரம்.. சிலருக்கு ஓய்வு கொடுக்கவே: விஜய் பேச்சு - விடியோ

post image

நாகை: ஏன் சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் செய்கிறேன் என்றால், உங்களுக்கு தொந்தரவு கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாள்களில் பிரசாரம் மேற்கொள்கிறேன், சிலருக்கு ஓய்வு கொடுக்கவே, ஓய்வு நாள்களில் பிரசாரம் செய்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் பேசியிருக்கிறார்.

தவெக தலைவர் விஜய், பிரசார பயணத் திட்டம் சனிக்கிழமைகளில் திட்டமிடப்பட்டது ஏன் என்பது குறித்து இன்று நாகையில் பேசும்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு கடல் தாய் மனதில் இருக்கும், எனது மனதுக்கு நெருக்கமான நாகையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.

கடந்த வாரம் பிரசாரத்தின்போது பெரம்பலூர் செல்ல வேண்டியது. ஆனால், செல்ல முடியாமல், போனது. இந்த நேரத்தில் பெரம்பலூர் பகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நாம் இந்த பிரசார திட்டத்தைப் போட்ட பிறகு, அது என்னப்பா சனிக்கிழமை, சனிக்கிழமை என கேள்வி எழுந்தது.

அது ஒன்றும் இல்லை. உங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக் கூடாது, உங்களது எந்த வேலைக்கும் தொந்தரவு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாள்களில் திட்டமிடப்பட்டது.

அரசியிலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இல்லையா, அதனால்தான் ஓய்வு நாள்களாகப் பார்த்து திட்டமிடப்பட்டது.

அங்கு அனுமதியில்லை, இங்க அனுமதியில்லை என எத்தனைக் கட்டுப்பாடுகள். அத்தனையும் சொத்தையான காரணங்கள்.

5 நிமிடம்தான் பேச வேண்டும், 10 நிமிடம்தான் பேச வேண்டும் எனக் கட்டுப்பாடு, நான் பேசுவதே 3 நிமிடம்தான், அதிலும் இதைப் பேசக் கூடாது, அதைப் பேசக் கூடாது.

நான் அரியலூர் செல்லும்போது அங்கு மின் தடை. திருச்சியில் பேசத் தொடங்கியபோது மைக் ஒயர் கட். இப்படி பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன என விஜய் கூறினார்.

அதற்கும் மேல், பேருந்துக்குள்ளேயே இருக்க வேண்டுமாம், கையை இப்படியே வைத்துக் கொள்ள வேண்டுமாம், கையை அசைக்கக் கூடாதாம். சிரிக்கக் கூடாதாம், மக்களைப் பார்த்து கையசைக்கக் கூடாது என கட்டுப்பாடுகள். நான் என்னவோ, ஏதோ என்று நினைத்தேன். ஆனால், நகைச்சவையாக இருக்கிறது. அதையும் நான் ரசிக்கிறேன். நேரடியாகவே கேட்கிறேன், மிரட்டிப் பார்க்கிறீர்களா? என விஜய் கேட்டுள்ளார்.

வெளிநாட்டு பயணம்: விடியோ வெளியிட்டு முதல்வர் விளக்கம்

மக்களுடன் ஸ்டாலின் செயலியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளார். விடியோவில் அவர் தெரிவித்ததாவது, கேள்வி: தொழில் முதலீட்டாளர்களிடம் தமிழ்நாடு குறித்த பார்வை ... மேலும் பார்க்க

ரூ. 30,000 கோடி முதலீட்டால் 55,000 வேலைவாய்ப்புகள்: அமைச்சர் டிஆர்பி ராஜா

தூத்துக்குடியில் 55,000 வேலைவாய்ப்புகள் பெறப்படவிருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் குறித்து செய்தியாளர்களுடன் அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகை... மேலும் பார்க்க

நான் பேசுவதே 3 நிமிடம்தான்.. மோடி, அமித் ஷா வந்தால் இப்படி செய்வார்களா? - விஜய்

மக்கள் சந்திப்பு பயணத்துக்கு திமுக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டினார்.தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு ... மேலும் பார்க்க

சொன்னார்களே, செய்தார்களா? நாகை பிரச்னைகளை பட்டியலிட்ட விஜய்!

நாகையில் பிரசாரம் மேற்கொண்ட விஜய், அந்த மாவட்ட மக்களின் பிரச்னைகளை பட்டியலிட்டு திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், ம... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - முதல்வரை விமர்சித்த விஜய்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது குறித்து தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிர... மேலும் பார்க்க

மிரட்டிப் பார்க்கிறீர்களா? பூச்சாண்டி வேலை வேண்டாம்: விஜய்

நாகையில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொண்டு உரையாற்றத் தொடங்கிய விஜய், நாகைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்தேன். மீனவர்கள் பாதுகாப்பு முக்கியம் என்று விஜய் பேசினார்.அவர் தொடர்ந்து பேசுகையில்,இலங்கைக... மேலும் பார்க்க