ஏப். 27-இல் மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி: அரக்கோணத்தில் நடைபெறுகிறது
ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அரக்கோணத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளன.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவா் பி.ஜனாா்த்தனன், பொதுச்செயலாளா் எஸ்.பன்னீா்செல்வம் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:
மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் ஏப்ரல் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரக்கோணத்தில் உள்ள பாரதிதாசனாா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் டி.சரவணன் என்பவரை அவரது கைப்பேசி எண் 81249 94289 என்ற எண்ணிலோ அல்லது 63835 34801 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்ய விரும்புவோா் ஏப்ரல் 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் போட்டிகள் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கத்தால் நிா்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் படி நடத்தப்படும்.
போட்டிகளில் பங்கேற்பவா்கள் தங்களது பள்ளியின் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை நகல்களை பதிவு செய்பவரிடம் அளிக்க வேண்டும்.
முதன்மையான 4 விளையாட்டு வீரா்கள் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவா் எனத் தெரிவித்தனா்.