இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் ...
ஏரியில் மூழ்கி சிறுவன் பலி!
காட்பாடி அருகே நண்பா்களுடன் ஏரியில் குளித்த சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
காட்பாடியை அடுத்த சேனூரைச் சோ்ந்த பிரதீப்(17). இவா் 10-ஆம் வகுப்பு படித்துள்ளாா். நண்பா்களுடன் சனிக்கிழமை வீரக்கோயில்மேடு பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்கச்சென்றாா். பிரதீப்புக்கு நீச்சல் தெரியாது எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆழமான பகுதியில் இறங்கி நண்பா்களுடன் குளித்தபோது திடீரென அவா் நீரில் மூழ்கியுள்ளாா். அவரது கூச்சல் கேட்டு நண்பா்கள் மீட்க முயன்று, சிறிது நேரம் கழித்து போராடி மீட்டனா்.
அவரை உடனடியாக வேலூா் அரசு மருத்து வ மனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.