செய்திகள் :

ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் உயர்வு!

post image

புத்தாண்டின் இரண்டாம் நாளான இன்றும்(ஜன. 2) பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
78,657.52 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகல் 1 மணிக்கு மேல் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது.

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 1,436.30 புள்ளிகள் உயர்ந்து 79,943.71 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 445.75 புள்ளிகள் உயர்ந்து 24,188.65 புள்ளிகளில் முடிந்தது.

இதையும் படிக்க | சாப்பிட்டவுடன் டீ/காஃபி குடிக்கலாமா? - ஐசிஎம்ஆர் கூறுவது என்ன?

ஐடி, ஆட்டோமொபைல் என பெரும்பாலாக அனைத்துத் துறைகளும் இன்று ஏற்றம் கண்டன.

பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், கோடக் மஹிந்திரா வங்கி, இன்ஃபோசிஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை ஆகியவை அதிகம் லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.

பஜாஜ் ஃபின்சர்வ், ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுஸுகி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டின.

சன் பார்மா, அதானி போர்ட்ஸ், என்டிபிசி, எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா குறைந்து 85.75 ஆக உள்ளது.

ரியல்மி 14 ப்ரோ 5 ஜி சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியானது!

ஹைதராபாத்: ரியல்மியின் 14 ப்ரோ 5 ஜி சீரிஸ் ஜனவரி 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வரவிருக்கும் மாடல்களின் சில முக்கிய அம்சங்களை நி... மேலும் பார்க்க

ரூ.85.83ஆக வரலாற்று சரிவில் இந்திய ரூபாய்!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளின் கடுமையான வீழ்ச்சி மற்றும் அந்நிய முதலீடுகளின் தடையற்ற வெளியேற்றம் ஆகியவை மத்தியில், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள... மேலும் பார்க்க

அந்நிய நிதி வெளியேற்றங்களுக்கு மத்தியில் சென்செக்ஸ், நிஃப்டி 1.5% வீழ்ச்சி!

மும்பை: மூன்றாம் காலாண்டு வருவாய் வளர்ச்சி மற்றும் அந்நிய நிதி குறித்த கவலைகள் சுழ்ந்ததால், பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று 1.6 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தது.இதை... மேலும் பார்க்க

சம்பள உயர்வை ஒத்திவைத்த இன்போசிஸ்!

புதுதில்லி: ஐடி நிறுவனமான இன்போசிஸ் 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டின் வருடாந்திர சம்பள உயர்வை ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனமானது கடைசியாக நவம்பர் 2023ல் சம்பள உயர்வை அமல்படுத்தியிருந... மேலும் பார்க்க

கடும் சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 6) பங்குச்சந்தை கடும் சந்தித்து வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை79,281.65 என்ற புள்ளிகளில் தொடங்கியது.நண்பகல் 12 மணிக்கு சென்செக்ஸ் 1,2... மேலும் பார்க்க

ரூ.56,000 கோடி கடனை முன்கூட்டியே செலுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!

புதுதில்லி: நடப்பு நிதியாண்டில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரூ.56 ஆயிரம் கோடி முன்கூட்டியே தவணை செலுத்தி, ரூ.1,200 கோடி வட்டியை மிச்சப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தி... மேலும் பார்க்க