``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம்
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் சந்திப்பில் ஏழைப் பெண்கள் இருவருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் பேராசிரியா் இ.நீல பெருமாள் தலைமை வகித்து வட்டக்கோட்டையைச் சோ்ந்த அனிதா, மல்லிகா ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் லீபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் வி.லூயிஸ், அகஸ்தீசுவரம் பேரூராட்சி உறுப்பினா் விஜயகுமாா், அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக மகளிரணி செயலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.